செல்போன் சிக்னல் கிடைக்காமல் நோயாளிகள் மருத்துவ பணியாளர்கள் அவதி…

2 Min Read
செல்போன் டவர்

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்குர் கிராம எல்லைப் பகுதியில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

இங்கு சாலை விபத்தில் சிக்கியவர்கள் விஷ பூச்சி,பாம்பு மற்றும் வெறிநாய்க் கடிக்கப்பட்டவர்கள், தீக்காயம் ஏற்பட்டவர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய  மக்கள் என ஏராளமானோர் சிகிச்சைக்கு தினந்தோறும் வந்து செல்கின்றன சிகிச்சைக்கு வருபவர்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்  மற்றும் வெளிப்புற பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் சிகிச்சை பெறுவது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாமல் தினமும் அவதிப்படுகின்றன.

மேலும் அவசர சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளுக்கு போதிய சிகிச்சை அளிக்கும் வகையில் அவசர உதவிக்கு மருத்துவமனை வளாகத்தில் மற்ற பகுதிகளில்  பணியாற்றும் மருந்து இவர்கள் மற்றும் செவிலியர்களை தொடர்பு கொண்டு அழைக்கப்பட செல்போன் சிக்னல் கிடைக்காமல் அவதிப்படுகின்றன.

செல்போன் சிக்னல் கிடைக்காத சூழ்நிலை

கள்ளக்குறிச்சி நகரத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல் மற்றும் தனியார் செல்போன் நிறுவனங்களின் அவர்கள் அலைவரிசை குறைவாக அமைக்கப்பட்டுள்ளதால் வெகு தொலைவில் உள்ள மருத்துவமனை பகுதிக்கு செல்போன் சிக்னல் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக  சொல்லப்படுகிறது.

மேலும் அந்த மருத்துவமனை முழுவதும் திறந்தவெளி பகுதிகள் ஏதும் இல்லாமல் முழுமையான கண்ணாடிகள் மற்றும் சுவர்களைக் கொண்டு மூடப்பட்ட நிலையில் அமைந்துள்ளதால் சரிவர செல்போன் சிக்னல்  கிடைக்க முடியாத  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல் மருத்துவமனை அருகில் மருத்துவக் கல்லூரியில் செயல்படுகிறது இந்த மருத்துவக் கல்லூரியில் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏராளமானோர் தங்கி பயின்று வருகின்றனர் மாணவர்களின் பெற்றோர்கள் அவசரத்திற்கு தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது.

எனவே நோயாளிகளில் மற்றும் பொதுமக்கள் மருத்துவர் மருத்துவ கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பகுதியில் பிஎஸ்என்எல் மற்றும் தனியார் செல்போன் நிறுவனங்கள் தடையில்லா செல்போன் சேவைகளை தொடரவும் மருத்துவ  மனை அருகில் புதிதாக செல்போன் டவர் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This Article
Leave a review