கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (52)என்பவர் எலவனாசூர்கோட்டை காவல் நிலையைத்தில் சென்னையை சேர்ந்த சிவா மற்றும் ரமேஷ் என்பவர்கள் எலவனாசூர்கோட்டை பகுதியைச் சேர்ந்த 73 நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 91,54,600/- ரூபாய் பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றிவிட்டதாக கொடுத்த புகார் மனுவை பெற்று எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் அவர்கள் விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் அவர்களுக்கு உத்தரவிட்டார், அதன்படி குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் விசாரணை செய்ததில் சென்னை, தண்டையார்பேட்டை சேர்ந்த சிவா (40)மற்றும் பாடியநல்லூர் ரமேஷ்(49) என்பவர்கள் எலவனாசூர்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 73 நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி கரூர் வைசியா வங்கி மூலம் 91,54,600/- ரூபாய் பணத்தை பரிவர்த்தனையாக பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கித் தராமலும் மேலும் கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றியுள்ளது தெரியவருகிறது மேற்படி மோசடியில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.