கள்ளக்குறிச்சி மாவட்ட எலவானாசூர்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.அரிகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது எறையூர் to அதையூர் சாலையில் உள்ள காட்டு கோவில் அருகே காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்த நபரை பிடித்து சோதனை செய்தனர்.அவர் எறையூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் லியோ பிரகாஷ் @ கிளி(26) என்பது தெரியவந்தது.அதனை அவர் வைத்திருந்த சுழற்றப்பட்ட சாக்கில் அனுமதியின்றி உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரிந்தது.

நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபரை கைது செய்து. அவர் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்து விசாரணை செய்தனர் . இந்த நாட்டு துப்பாக்கியை பயன் படுத்தி வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடி வருவதும் தெரியவந்துள்ளது.அதனை தொடர்ந்து அந்த நபர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் யாரேனும் அரசு அனுமதியின்றி உரிமம் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தால் தாமாகவே முன்வந்து ஒப்படைத்துவிட வேண்டும், மீறி சட்டத்திற்கு புறம்பாக வைத்திருப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.