கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலைப் பன்பாட்டு துறை ஓவிய நுண்கலை குழுவுடன் இணைந்து தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் 18 வயதிற்கு மேற்பட்ட ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்களுக்கான சிறப்பு கலை பயிற்சி முகாம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்கீரனூர், அண்ணா நகரில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட மர சிற்பக் கலைஞர்கள், சுய உதவி குழுக்களின் கூட்டமைப்பு விருக்கசா மரச் சிற்ப பொதுப்பணி கூட்டமைப்பு கட்டத்தில் வருகிற 17,18ஆம் தேதிகளில் நடக்கிறது.

முகாமில் தமிழகத்தின் புகழ் வாய்ந்த ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்கள் கலந்து கொண்டு மரபு பாணி ஓவியம், நவீன பாணி ஓவியம், தஞ்சாவூர் ஓவியம், கண்ணாடி ஓவியம், மற்றும் மர சிற்பம் ஓவியங்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் முகாமில் கலந்து கொள்ளலாம்.

இரண்டு நாட்கள் அளிக்கப்படும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஓவிய கலைஞர்கள் மற்றும் சிற்ப கலைஞர்களுக்கு பயிற்சி நிறைவு நாளில் பயிற்சி பெற்றமைக்கான சான்றிதழ் வழங்கப்படும். முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆகியவற்றை குறிப்பிட்டு உதவி இயக்குநர் மண்டல கலை பண்பாட்டு மையம், மண்டல கயிறு வாரியம் அருகில், வல்லம் சாலை பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர் என்ற முகவரிக்கு நேரிலோ தொலைபேசி வாயிலாகவோ தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் கூடுதல் விபரங்களுக்கு 04362-232252,9442507705 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். என தெரிவித்துள்ளார்.