கள்ளச்சாராய உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு கருணாபுரத்தைச் சேர்ந்த 4 பேர் நேற்று முன் தினம் கள்ளச்சாராயம் அருந்திய நிலையில், நேற்று உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படுவோரில் எவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழக்கவில்லை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதுகுறித்து பிரேத பரிசோதனைக்குப் பின்னரே தெரியவரும் என கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமார் விளக்கம் அளித்தார்.

கள்ளக்குறிச்சி சாராயம் அருந்தி உயிரிழந்த மூவர் பிரவீன், சேகர் ,சுரேஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் உடல்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் மணிகண்டன் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்தார் இவர்களின் உடல்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு இரவே கொண்டு செல்லப்பட்டது.
அதிகாரிகள் பணியிட மாற்றம் ..பணியிடை நீக்கம்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் – ஷர்வண்குமார்
பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் விவரம்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – சமய்சிங்மீனா .
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் – தமிழ்ச்செல்வன் மற்றும் ஆய்வாளர் கவிதா திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிசெல்விமற்றும் உதவி ஆய்வாளர் பாரதி கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் – ஆனந்தன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவசந்திரன் காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன் – சிறப்பு உதவி ஆய்வாளர் மனோஜ் திருக்கோவிலூர். செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பலிஎணிக்கை உயரக்கூடும் என்று மருத்துவமனை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர்கள் எ.வ.வேலு ,மா. சுப்பிரமணியன்
தகவல் அறிந்த அமைச்சர்கள் எ.வ.வேலு ,மா. சுப்பிரமணியன் சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன். உதயசூரியன் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரடியாக வந்து சிகிச்சை பெருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினர்.
தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது இதுவரையில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் 13 பேர் இறந்துள்ளனர் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இந்த தவறு நடைபெற காரணமாக பணியில் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்வு தொடர்பான விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
புதிய ஆட்சியர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த சுகாதாரத் திட்ட இயக்குநர் ம.கோவிந்தராவ் இஆப ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெத்தனால் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வரும் நபர்களை நேரில் பார்வையிட்டு தேவையான மருத்துவ உதவிகளும், மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தினார்.