கல்லூரி பேராசிரியர் கைது கலாஷேத்ராவில் என்ன நடக்கிறது

2 Min Read
பேராசிரியர் ஹரி பத்மன்

மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்யக்கோரி கலாஷேத்ரா கல்லூரியில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தனிப்படை பொலிசாரால் இன்று கைது செய்ய பட்டுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

மத்திய கலாச்சாரத்துறையின் கீழ் சென்னை திருவான்மையூரில் செயல்படும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவியருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது.

பேராசிரியர் ஹரி பத்மன்

இது குறித்து கல்லூரி நிர்வாகம் கமிட்டி அமைத்து விசாரணை நடத்தியது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் தான் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதன் பின்னர் இந்த விவகாரம் அடங்கிய நிலையில் கல்லூரியில் மீண்டும் பாலியல் தொல்லை பிரச்சனை எழுந்துள்ளது பேராசிரியர் ஹரி பத்மன், உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்சித் லால், ஸ்ரீநாத் ஆகிய நான்கு பேர் இந்த குற்றச்சாட்டில் சிக்கினர்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாணவியர் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இது மட்டுமல்ல 2013ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவியர்கள் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளனர் அதில் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரி பத்மன் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருந்ததாகவும், மாணவிகளை உல்லாசத்திற்காக வீட்டிற்கு அழைத்தார் என்றும் புகார் அளித்துள்ளனர்.

மாணவர்கள் போராட்டம்

அதையடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள இந்த நிலையில் பேராசிரியர் ஹரிபத்மன் ஹைதராபாத்தில் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது . அவரை பிடிக்க தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு அவருடைய நடவடிக்கைகளை பின்தொடர்ந்து வந்தனர் .

இதற்கிடையில் மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி நேற்று முன் தினம் கல்லூரிக்கு சென்று மாணவியரிடம் விசாரணை நடத்தினார். மாணவிகள் சிலர் எழுத்து பூர்வமாகவும் புகார் அளித்தனர். இந்த நிலையில் இன்று தனிப்படை போலீசார் கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மனை இன்று கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர் .

Share This Article
Leave a review