Kadayanallur- நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தடை விதிக்க முடியாது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

1 Min Read
  • கடையநல்லூர் நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தடை விதிக்க உத்தரவிடக்கோரி வழக்கு.
  • நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்க முடியாது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மனுதாரர் தனது கோரிக்கையை நகராட்சி துறை இயக்குனருடன் தெரிவித்து நிவாரணம் பெறலாம் நீதிபதி அறிவுறுத்தல்.

- Advertisement -
Ad imageAd image

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், திவான் மைதீன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்தனர்.

அதில், ” ராமகிருஷ்ணன் கடையநல்லூர் நகராட்சியின் 26 வது வார்டு கவுன்சிலர் ஆகவும், திவான் மைதீன் 13 வது வார்டு கவுன்சிலர் ஆகவும் தேர்வு செய்யப்பட்டோம். கடையநல்லூர் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. தலைவராக ஹபீப் ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார்

நகராட்சி தலைவர் வார்டு கவுன்சிலர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் அவரது விருப்பத்திற்கு செயல்பட்டு வருகிறார் கடந்த 16ஆம் தேதி நகராட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அதில் ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெரும்பாலான தீர்மானங்கள் நகராட்சித் தலைவரின் விருப்பத்திற்கு ஏற்று அமைந்திருந்தது. அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்.

இருப்பினும் கடையநல்லூர் நகராட்சி தலைவர் தீர்மானங்களை நிறைவேற்றி விட்டார்.
17 கவுன்சாலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார்.

இது விதிகளுக்கு எதிரானது ஆகவே ஆகஸ்ட் 16ஆம் தேதி கடையநல்லூர் நகராட்சிமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இடைக்கால தடை விதிப்பதோடு, உள்ளாட்சி நிர்வாக விதிகளின்படி மீண்டும் நகராட்சி மன்ற கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது நீதிபதி நகரமன்ற கூட்டதில் நிறைவேற்றபட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது.

மனுதாரர்கள் தங்களது கோரிக்கை குறித்து
நகராட்சி இயக்குநரிடம் மனு செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Share This Article
Leave a review