நீதித்துறை: நிதியுதவித் திட்டங்களை கண்காணிக்க நியாய விகாஸ் இணையதளம் தொடக்கம்

1 Min Read

நீதித்துறையின் கட்டமைப்பு மேம்பாடுகளுக்கான நிதியுதவித் திட்டங்களை கண்காணிக்க நியாய விகாஸ் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

நீதித்துறையின் கட்டமைப்பு மேம்பாடுகளுக்கான மத்திய நிதியுதவித் திட்டங்களை கண்காணிக்க நியாய விகாஸ் இணையதளம் மத்திய சட்ட அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய தொலை உணர்வு மையம் (என்ஆர்எஸ்சி), இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), ஆகியவற்றின் தொழில்நுட்ப உதவியுடன்  https://bhuvan-nyayavikas.nrsc.gov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளம் நீதித்துறை கட்டமைப்புத் திட்டங்களை திறம்பட்ட முறையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்த உதவும்.

எளிய நடைமுறைகள், நிதி விடுவிப்பு மற்றும் பயன்பாட்டைக் கண்காணித்தல், திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் உள்கட்டமைப்பைப் புவிக்குறியீடு செய்தல் (ஜியோ டேகிங்) ஆகியவை இந்தத் தளத்தின் முக்கிய அம்சங்களாகும்.

Share This Article
Leave a review