கொடாநாடு வழக்கில் எடப்பாடி முக்கிய காரணம் அவரை விசாரிக்க வேண்டும் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜன் அண்ணன் தனபால்

0
98
தனபால்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் திட்டமிட்டு கொடநாட்டில் இருந்து  முக்கிய ஆவணங்களை ஐந்து பேக்குகள் மூலம் எடுத்து வந்ததாக கனகராஜின் அண்ணன் குற்றச்சாட்டு….

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தவர் கனகராஜ் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய இவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்‌‌.இந்த வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் ஜாமினில் வெளியே வந்த தனபால்,  கடந்த வாரம் நில மோசடி வழக்கில் மேச்சேரி காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையில் தனபாலை கைது செய்தனர் பின்னர்  சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சேலம் மத்திய சிறையில்   உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால்,  சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சைக்குப் பின் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனபால் ஜாமினில் வெளியே வந்தார் இந்த நிலையில் சேலத்தில் மோசடி வழக்கு தொடர்பாகவும் கொடநாடு கொலை வழக்கு தொடர்பாகவும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்

அப்போது அவர் கூறுகையில் மேச்சேரியில் நில மோசடி வழக்கில் என்னை கைது செய்தனர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றால் பத்து லட்ச ரூபாய் கேட்டு காவல்துறையினர் மிரட்டினர் தர முடியாது என்ற நிலையில் கண்களை  கட்டிவிட்டு மேச்சேரி காவல் ஆய்வாளர் சண்முகம் எனது பல்லை உடைத்து சித்திரவதை செய்தார்கள் இந்த மோசடி வழக்கிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது எனவே என்னை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்‌‌மேலும்  கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருக்கிறது அவர் கூறியதால் தான் எனது தம்பி கனகராஜ் கொடாநாடு சென்று ஐந்து பேக்குகளில் முக்கிய ஆவணங்களை எடுத்து வந்ததாக தெரிவித்தார் மூன்று பேக்குகள்  சங்ககிரி சேர்ந்த ஒருவரிடமும் இரண்டு பேக் சேலத்தை சேர்ந்தவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது இந்த கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு முழு பொறுப்பு உள்ளது அவரை இதுவரை காவல்துறை ஏன் விசாரிக்கவில்லை  அவரை விசாரித்தால் பல உண்மைகள் என்று கூறினார் மேலும் எடப்பாடி காவல் ஆய்வாளர் எனது செல்போனை எடுத்துக் கொண்டனர் அதில் முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளது இதை சிபிசிஐடி காவல்துறையிடம் தெரிவிக்க தயாராக உள்ளேன் இதுவரை நான் தெரிவிக்காமல் இருந்ததற்கு காரணம் எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது அதனால் கொடநாடு கொலை வழக்கு குறித்து எதுவும் சொல்லாமல் இருந்தேன் தற்போது முதல்வர் என்னை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் உண்மைகளை சொல்கிறேன் எனவே எனது உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளது எனவே முதல்வர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் தனது தம்பி கனகராஜ் விபத்தில் இறந்தது திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

பேட்டி: தனபால்.‌‌மறைந்த ஜெயலலிதா கார் டிரைவரின் அண்ணன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here