மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டி கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு விழா

1 Min Read
அ.புதுப்பட்டி ஜல்லிக்கட்டு

தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் இன்று  மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளது அ.புதுப்பட்டி கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ள  பாலமரத்தான் என்ற சுந்தரவள்ளியம்மன்  சுவாமி கோவில் உற்சவத்தை முன்னிட்டு தற்போது ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின் இன்று இந்த ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்க 900 ஜல்லிக்கட்டு காளைகளும் 400 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image
காளையை அடக்கும் வீரர்கள்

விழாவிற்கான பிரம்மாண்ட வாடிவாசல் அமைக்கப்பட்டு காலை 7.30 மணிக்கு  ஜல்லிக்கட்டு விழா துவங்கியது. முதலாவதாக கிராமத்து மரியாதை காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. பின்னர் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருச்சி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்று சிறப்பாக விளையாடும் ஜல்லிகட்டு காளைகளுக்கும் அதனை மடக்கிப் பிடிக்கும் மாடு பிடி வீரர்களுக்கும் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம் என பல லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு விழாவினை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட காளை மாடு ஒன்று திடீரென மயங்கி விழுந்தது,உடனே காளை மாட்டின் உரிமையாளர் மற்றும் பார்வையாளர்கள் அந்த மாட்டின் அருகே சென்று பார்க்கச் சென்ற போது வாடிவாசலில் இருந்து வந்த மற்றொரு காளை மாடு யாரையும் நெருங்க விடாமல் தடுத்தது.இது பார்வையாளர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்தியது.

Share This Article
Leave a review