விழுப்புரம் அருகே சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூன்று வாலிபர்களுக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் பர பரப்பு தீர்ப்பு.15 ஆயிரம் அபராதம்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகாவிற்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒருநாள் மாலை 3 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கெடார் முருகன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ், சுபாஷ் மற்றும் ஒரு சுபாஷ் ஆகிய மூன்று பேரும் அந்த சிறுமியை வழிமறித்து,பேச்சு கொடுத்துள்ளனர் அந்த சிறுமியிடம் சுடிதார் வாங்கி வைத்துள்ளதாகவும் அதனை தருவதாகவும் கூறி அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த ஒரு காருக்குள் அந்த சிறுமியை அழைத்துச் சென்று மூன்று பேரும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச் சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோகள் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி ஹெர்மிஸ் நேற்று தீர்ப்பளித்தார்.
அதில் குற்றம் சாட்டப்பட்ட சுபாஷ்,விக்னேஷ்,சுபாஷ் ஆகிய மூவருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து சிரையில் அடைக்க வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் தலா 15,000 அபராதம் விதிக்கப்பட்டும்
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக தமிழக அரசு ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் என்று கூறி தீர்ப்பு வழங்கினார். இதை அடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட மூன்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மூன்று பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.