தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அருகே உள்ள அதிராம்பட்டி நம் பகுதியில் மாருதி நிறுவனத்தின் பொலினோ வகை காரில் ( TN63 AR 2979 )கஞ்சா கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அந்தப் பகுதியில் வாகன சோதனை செய்த பொழுது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் போலீசார் நேற்று வண்டிப்பேட்டையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பட்டுக்கோட்டையிலிருந்து வந்த காரை சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனை செய்தனர். அந்த காருக்குள் 7 பண்டல்களில் 117 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.தொடர்ந்து காருடன் கஞ்சா பண்டல்களை பறிமுதல் செய்த போலீசார், காரிலிருந்த 2 பேரை அதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த வாகனத்தினை திருவரம்பூர் காவல் நிலையத்தில் 2013 ம் ஆண்டு காவல் காவலராக பணியாரத்தப்பட்டு,
அதன் பிறகு திருச்சி முக்கொம்புபகுதியில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக அக்டோபர் 2023 முதல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சங்கர ராஜபாண்டியன் மற்றும் அவரது உறவினர் தவமணி ( வயது 26) இருவரும் வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்த பொழுது அந்த வாகனத்திற்குள் 117 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா நான்கு மூட்டைகளில் கட்டி எடுத்து வந்த தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அந்த வெள்ளை கலர் பொலினோ கார் மற்றும் நான்கு மூட்டை ( 117 கிலோ) கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து சங்கர ராஜ பாண்டியன், தவமணி ஆகியோரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த ஆந்திராவை சேர்ந்தவர் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா சகஜமாக மாணவர்களுக்கு கிடைப்பது பற்றி பெற்றோர்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளது பற்றி பலமுறை செய்திகள் வெளியிட்டும் கஞ்சாவை ஒழிப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருப்பது பெற்றோர்களுக்கு பெரும் வேதனை அளிப்பதாக கூறுகின்றனர்.