அரசியல் எதிரிகள் எழுதிய கடிதத்தால் தான் சொத்து குவிப்பு வழக்கு வேலூருக்கு மாற்றப்பட்டது..!

3 Min Read

அரசியல் எதிரிகள் எழுதிய கடிதத்தினால் தான் சொத்து குவிப்பு வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் இருந்து வேலூர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் அந்த கடிதம் தனக்கு வேண்டும் என்று ஐகோர்ட்டில் அமைச்சர் பொன்முடி தரப்பில் கோரிக்கை விடுத்து வாதிடப்பட்டது. தமிழ்நாட்டில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி இவர், 1996 – 2001 ஆம் ஆண்டுகளில் நடந்த திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியை 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக அவர் மீதும், அவரது மனைவி மீதும், கடந்த 2002 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

இந்த வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் இருந்து, வேலூர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் கோர்ட்டு குற்ற சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகிய வரை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட் மறு ஆய்வு செய்ய தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் பொன்முடி தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர். இளங்கோ ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது வழக்கின் விசாரணையை விழுப்புரம் கோர்ட்டில் இருந்து வேலூர் கோர்ட்டுக்கு மாற்றுயதற்காகதான் இந்த ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துள்ளது.

விழுப்புரம் கோர்ட்

ஆனால் வேலூர் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று பொன்முடி தரப்பில் கோரிக்கை விடுக்கவில்லை. அவ்வாறு மாற்றும் போது ஐகோர்ட்டும் பொன்முடி தரப்பில் விளக்கம் கேட்கவில்லை. விளக்கம் கேட்காத பட்சத்தில் வழக்கு மாற்றத்திற்கு பொன்முடி எப்படி பொறுப்பு ஏற்க முடியும். வேலூர் கோர்ட் நீதிபதி ஓய்வு பெறுவதற்கு 4 நாட்கள் முன்பு, விடுதலை செய்து தீர்ப்பளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் 9 மாதங்களாக வழக்கை விசாரித்தது பற்றி எதுவும் இல்லை. பொன்மொழியின் அரசியல் எதிரிகள் யாரோ ஐகோர்ட்டுக்கு கடிதம் எழுதிய பின்னர்தான் இந்த வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் இருந்து வேலூர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டதால் தகவல் கிடைத்துள்ளது.

எனவே அது தொடர்பான கடிதத்தை எங்களுக்கு வழங்க ஐகோர்ட்டுக்கு தலைமை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். இதுபோல நிர்வாக ரீதியாக உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. இந்த கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்தால் அது பரிசிளிக்கப்படும். சட்டசபையில் பொன்முடி ஆக்கப்பூர்வமாகவும் அரசியல் திறனுடனும் செயல்படுகிறார். அதனால் அரசியல் ரீதியாக பழி வாங்கும் நடவடிக்கையாக அவர் மீது இந்த வழக்கு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போடப்பட்டது. இந்த விவகாரத்தில் ஊடகங்களில் வெளிச்சம் அதிகமாக உள்ளதால் தாமாக முன்வந்து இந்த ஹைகோர்ட்டுக்கு வழக்கை விசாரணைக்கு எடுத்ததால் பொன்மொழி குற்றவாளியாக சித்தரிக்கப்படுகிறார்.

வேலூர் கோர்ட்

இவ்வாறு அவர் வாதிட்டார். உன்னுடைய விடுதலை செய்து தீர்ப்பளித்த வேலூர் கோர்ட் முன்னாள் நீதிபதி தரப்பில் ஆஜரான வக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி முன்னாள் நீதிபதி தரப்பில் விரிவான வாதம் முன்வைக்க வருகிற 27ஆம் தேதி அரை அவகாசம் வேண்டும் என்றார். ஆனால் நீதிபதி இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று கூறினார். அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த விவாகரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் நிலைப்பாடு என்ன என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு போலீஸ் தரப்பில் வேலூர் கோர்ட் தீர்ப்பை ஆய்வு செய்து, முடிப்பதற்குள் இந்த ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து விட்டது. அதனால் லஞ்ச ஒழிப்பு போலீஸ்சாரின் நிலை குறித்து கேட்டு அடுத்த விசாரணையின் போது தெரிவிக்கிறேன் என்றார். இருப்பினும் லஞ்ச ஒழிப்பு துறை நிலைபாடு குறித்து விளக்கம் பெற்று தெரிவிப்பதாக தெரிவித்தார்.

Share This Article
Leave a review