- பட்டுக்கோட்டையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்தது – மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது – கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதன் தாக்கத்தால் பொதுமக்கள், வயதானவர்கள், சிறு குழந்தைகள் செய்வதறியாமல் தினசரி வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் கடந்த ஒரு மாதமாகவே வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள், வயதானவர்கள், சிறு குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது.
அதனைத் தொடர்ந்து இன்று மாலை மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையானது சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நல்ல மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
எவ்வளவு மழை பெய்தாலும் மழைநீர் தேங்காத வண்ணம் உடனடியாக வடிவதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் சாலைகளில் மழை நீர் தேங்காமல் பெருக்கெடுத்து ஓடியது குறிப்பிடத்தக்கது. இந்த கோடையில் நேற்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த கோடை மழையால் பட்டுக்கோட்டை பகுதி மக்கள் மட்டுமல்லாது அதன் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொஞ்சம் இதையும் படிங்க :https://thenewscollect.com/cool-lip-gutka-to-protect-school-students-from-tobacco-uses-judge-opinion/
பட்டுக்கோட்டை மட்டுமல்லாது பேராவூரணி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்தது..