திருவண்ணாமலை விழுப்புரம் அமைச்சர் எ.வ வேலு தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக ஐ.டி ரெய்டு.

2 Min Read

சென்னை,விழுப்புரம், திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

இதற்கு முன்னர் மூத்த அமைச்சர்களான செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. கடந்த மாதம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. தற்போது அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார் அமைச்சர் எ.வ வேலு.

வெள்ளிக் கிழமை மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 30 இடங்களில் ஒரே நேரத்தில், அமைச்சர் வேலு மற்றும் மாநிலத்தின் இரண்டு பெரிய பில்டர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையின் சோதனை நடந்தது. சோதனை விவரங்கள் குறித்து, வருமான வரித் துறையினர் வாய் திறக்காமல் இருந்த நிலையில், மும்பை, டெல்லி மற்றும் பெங்களூருவிலிருந்து ஏராளமான அதிகாரிகள் விமானம் மூலம் அனுப்பப்பட்டு, அந்தந்த இடங்களுக்கு அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் ‘சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள்’ எனப் பதிவு செய்து தங்கி இருந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அருணை கல்லூரி

வருமான வரித்துறை அதிகாரிகளின் மற்றொரு குழு -குடியிருப்பு மற்றும் அலுவலகங்களை ஆய்வு செய்தது.
சென்னையில் உள்ள தி.நகர், கீழ்ப்பாக்கம், திருவான்மியூர், வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் வேலுவின் சொத்துகள், திருவண்ணாமலையில் உள்ள அவரது சொத்துகள் விழுப்புரத்தில் உள்ள பிரேம் இல்லம் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனை இன்னும் ஓரிரு நாட்களுக்கு தொடரும் என வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். அமைச்சர் வேலு தவிர, பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலக வளாகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.மேலும் சென்னையில் இரண்டு ஹோட்டல்களை வைத்துள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் வளாகங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சர்தார் படேல் சாலையில் அமைந்துள்ள மாநில நெடுஞ்சாலை விருந்தினர் மாளிகையிலும் குழுவினர் சோதனை நடத்தினர்.

சோதனை

திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் அக்டோபர் முதல் வாரத்தில் சோதனையிடப்பட்டன. பின்னர் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், சவீதா குழுமம் மற்றும் ஜெகத்ரட்சகனிடம் இருந்து 60 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை அறிக்கையில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a review