மாவீரன் ஜெ.குருவின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் – ராமதாஸ்

1 Min Read
குரு. ராமதாஸ்

மாவீரன் ஜெ.குருவின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,”வாழும் வரையிலும், வாழ்க்கையை நிறைவு செய்த பிறகும் என்னிடமிருந்து பிரிக்க முடியாத மாவீரனின் ஐந்தாம் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.  அவனை நான் மறந்தால் தானே இந்த நாளில் நினைவு கூற முடியும். அவன் எந்நாளும்  என் நெஞ்சில் குடியிருக்கிறான்.   கட்சிக்காகவும், சமூகத்திற்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகள் மறக்க முடியாதவை. மாவீரனின் தியாகத்தையும், வீரத்தையும்  நெஞ்சில் நிறுத்தி, இந்நாளில் மட்டுமின்றி, எந்நாளும் போற்றுவோம்.

காடுவெட்டியில் உள்ள நினைவு மண்டபத்திலும், திண்டிவனம் கோனேரி குப்பத்தில் கல்விக்கோயில் வளாகத்தில் உள்ள மாவீரனின் உருவச்சிலைக்கும் அங்குள்ள பராமரிப்பாளர்கள் மூலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த நாளில் அனைவரும் அவரது நினைவைப் போற்றுவோம்” எனக் கூறியுள்ளார்.

Share This Article
Leave a review