அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என்று தான் ஆசை. அதற்கான நிதி வரும் போது அதற்கான நடவடிக்கையை தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார், என தஞ்சையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
தமிழகத்தில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம் தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு பள்ளியில் படிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து பயிலும் வரும் பன்னிரண்டாம் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அரசு விலையில்லா மடிக்கணினியை வழங்கினார்.

அப்போது அளித்த பேட்டியில், தஞ்சை மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற அனைத்து முதன்மை கல்லூரியில் அரசு பள்ளியை சார்ந்த 12ம் மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள். இதற்கு மாணவர்களிடைய ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு தான் காரணம். இது மேலும் அடுத்த அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். மாதிரி பள்ளி கொண்டு வந்து இரண்டு ஆண்டுகளில் திருச்சியில் உள்ள தேசிய சட்டக் கல்லூரி, தேசிய தொழில்நுட்பக் கல்லூரி , சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகம் அண்ணா பல்கலைக்கழகம் தஞ்சையில் உள்ள தேசிய உணவு தொழில் நுட்ப கழகம் சென்று சந்தித்து மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சார்பில், இரண்டு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதற்கான ஒரு ரிசல்ட் ஆக தான் நாங்கள் பார்க்கிறோம். தாய்வானில் அரசு பள்ளியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் அரசு உதவியுடன் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டு கலை விழாவிற்காக பள்ளி மாணவர்கள் 4ம் தேதி ஜப்பானிற்கு இரண்டு அணியாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பள்ளி மாணவர்களுக்கு அரசு லேப்டாப் வழங்கும் திட்டம் குறித்த கேட்டதற்கு, நிதிநிலைமை சரியாக வரும் போது தான் அது குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறினார்.

அதிமுக ஆட்சியில் ஒன்றே கால் லட்சம் அரசு லேப்டாப்புகள் அதிகமாக மீதம் வைத்து விட்டு சென்று விட்டார்கள். லேப்டாப் இல்லாவிட்டாலும் அவர்கள் கல்வித்திறன் வளர்ச்சி குறைந்து விடக்கூடாது, என்பதற்காக அரசு பள்ளியில் உள்ள ஆய்வகங்கள் அதிநவீன வசதியுடன் மாற்ற வேண்டும் என்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்களுக்கு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என்று தான் ஆசை அதற்கான நிதி வரும்போது அதற்கான நடவடிக்கையை தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.