பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள காவல்துறை திங்களன்று, தடை செய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான ISIS , ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமியக் கட்சியின் அரசியல் மாநாட்டில் தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசரணையில் தெரியவந்துள்ளது , இந்த கொடூர சம்பவத்தில் குறைந்தது 46 பேர் பலியாகியுள்ளார் மேலும் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
இந்த தாக்குதலானது ஞாயிற்றுக்கிழமை , 400 க்கும் மேற்பட்ட கன்சர்வேடிவ் ஜமியத் உலமா இஸ்லாம்-ஃபாஸ்ல் (JUI-F) கட்சியின் உறுப்பினர்கள், ஆப்கானிஸ்தானின் எல்லை பகுதியான கர் நகரில் கூட்டம் ஒன்றில் பங்குகொண்டபோது நடைபெற்றுள்ளது .
பஜாவுர் குண்டுவெடிப்பு குறித்து விசாரித்து தகவல்களை சேகரித்து வருகிறோம். தடை செய்யப்பட்ட அமைப்பான (ஐஎஸ்ஐஎஸ்) சம்மந்தப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது ,என்று காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.
மொத்தம் 38 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும், எட்டு அடையாளம் தெரியாத உடல்கள் இன்னும் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை அதிகாரி நசீர் கான் தெரிவித்தார்.
தற்கொலை தாக்குதல் நடத்தியவர் இந்த தாக்குதலுக்கு 10 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் பயன்படுத்தியிருப்பதாக மாகாண காவல்துறை தலைவர் அக்தர் ஹயாத் கான் தெரிவித்தார். மாநாட்டின் முன் வரிசைகளில் அமர்ந்திருந்த பங்கேற்பாளர்களில் குண்டுதாரியும் இருந்ததாக அவர் கூறினார்.
மாநாட்டு மேடைக்கு அருகே தாக்குதல் நடத்தியவர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.
காவல்துறை மற்றும் சாட்சிகளின் கூற்றுப்படி, JUI-F மாவட்ட அமீர் மௌலானா அப்துல் ரஷீத் மேடைக்கு வந்தவுடன் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது .
இறந்தவர்களில் JUI-F தெஹ்சில் கர் மௌலானா ஜியாவுல்லா ஜான், பொதுச் செயலாளர் மௌலானா ஹமீதுல்லா, மாவட்ட தகவல் செயலாளர் முஜாஹித் கான் உள்ளிட்டோர்கள் இறந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் பஜாவுர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்கள் பஜாவுரில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பெஷாவரில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
15 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என மீட்புப் படையினர் எச்சரித்துள்ளனர்.
குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், இதற்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என உறுதியளித்துள்ளார்.
“பாகிஸ்தானிய தேசமும், சட்ட அமலாக்க துறையினரும் மற்றும் நமது பாதுகாவலர்களும் எதிரிகளின் இத்தகைய கோழைத்தனமான தந்திரங்களை வெற்றி பெற அனுமதிக்க மாட்டார்கள்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
ஷெரீப் தனது இரங்கலை தெரிவிக்க JUI-F தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மானிடம் பேசினார்.