ஜெய்லர் படத்தில் இந்த பிரபல நடிகரா.? இது நல்ல ட்விஸ்டா இ …

Jothi Narasimman
2 Min Read
ஜெய்லர் படத்தில் இந்த பிரபல நடிகரா.?

ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. என்னதான் ரஜினியின் சமீபத்திய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அவரின் மவுசு இன்றளவும் குறைந்தபாடில்லை. மேலும் இயக்குனர் நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட் சரியாக போகவில்லை. இருப்பினும் ஜெயிலர் படத்தின் மூலம் அவர் வெற்றிப்பாதைக்கு திரும்புவார் என
எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

- Advertisement -
Ad imageAd image

இவ்விழாவில் ரஜினி பேசிய விதத்தை பார்த்தால் ஜெயிலர் படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையில் இருக்கின்றார் என்றே தெரிகின்றது.
மேலும் ஒரு இயக்குனரின் சப்ஜெக்ட் தான் தோற்குமே தவிர இயக்குனர் ஒரு போதும் தோற்கமாட்டார் என கூறி நெல்சனின் மீது தான் வைத்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார் ரஜினி.

இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தின் ட்ரைலர் வெளியாகி அமோகமான வரவேற்பை பெற்று படத்தின் மீதான ஹைப்பை அதிகரித்தது. இந்நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு சில தினங்களே இருக்கும் நிலையில் படத்தின் முன்பதிவும் அமோகமாக இருக்கின்றது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அயல்நாடுகளிலும் ஜெயிலர் படத்திற்கு முன்பதிவு அமோகமாக இருப்பதால் இப்படம் வசூல் சாதனை செய்யும் என்றே எதிர் பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் துவங்கிய போது இப்படத்தில் பிரபல நடிகரான ஜெய் சர்ப்ரைஸான ஒரு ரோலில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வந்தது.

அதன் பிறகு இதைப்பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதையடுத்து ஜெயிலர் படத்தில் ஜெய் நடிக்கிறாரா ? இல்லையா ? என உறுதியாக தெரியவில்லை என்றாலும் இப்படத்தில் சர்ப்ரைஸாக ஒரு நடிகர் கேமியோ செய்துள்ளார் என தகவல்கள் வருகின்றன. ஆனால் அது யார் என இதுவரை தெரியவில்லை. மேலும் ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய ட்விஸ்ட்டாக அந்த கேமியோ இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஜெயிலர் படம் வெளியான பிறகு தான் இந்த தகவல் உண்மையா? இல்லை வெறும் வதந்தியா என தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a review