உலகக்கோப்பை விளையாட்டில் குல்தீப்புக்கு இடமா.? புலம்பிய சுனில் ஜோஷி.!

0
67
குல்தீப் யாதவ்

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் குல்தீப் யாதவின் அபாரமான பந்துவீச்சால் 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் இந்திய அணி ஆடிய ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக குல்தீப் யாதவ் உருவெடுத்துள்ளார். இதனால் உலகக்கோப்பை தொடரில் விளையாடு ஸ்பின்னர்களில் குல்தீப் யாதவிற்கு இடம் உறுதி என்று சொல்லப்படுகிறது. அதேபோல் இலங்கையில் நடக்கவுள்ள ஆசியக் கோப்பைத் தொடரிலும் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், முதல் ஸ்பின்னராக குல்தீப் யாதவை தேர்வு செய்யும் நிலை ஏற்படும்.

இந்த நிலையில் குல்தீப் யாதவின் கம்பேக் குறித்து முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சுனில் ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார். அதில், 2021ஆம் ஆண்டில் குல்தீப் யாதவ் மோசமான கட்டத்தில் இருந்தார்.
இந்திய டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. கொல்கத்தா அணியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனிடையே அவருக்கு ஏற்பட்ட காயம் அவரது கம்பேக்கை மேலும் கடினமாக்கியது. இந்திய அணியில் இருந்து குல்தீப் யாதவ் நீக்கப்பட்ட போது, நான் தேர்வுக் குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்தேன். அவரது காயத்தை பற்றி அறிந்து கொள்ள யாரும் இல்லை. அப்போது பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த போது, அவரது பந்துவீச்சிலும் பல்வேறு மாற்றங்களை செய்தேன். குறிப்பாக குல்தீப் யாதவின் ஃபிரண்ட் ஆர்ம் வேகத்தை அதிகபடுத்தினேன். அதேபோல் கைகளை சுழற்றும் போது பந்தையும் அதிகமாக சுழல வைக்க அறிவுறுத்தினே.

குல்தீப் யாதவ் 2.0 வெர்ஷனில், அவரின் ஃபிரண்ட் ஆர்ம் இலக்கை நோக்கி இருக்கும். அதாவது அவரது பந்துவீசும் கை, இலக்கை நோக்கியதாக இருக்கும். அதேபோல் ஆக்‌ஷன் மிகவும் வேகமாக மாறியுள்ளது. இதன் காரணமாகவே குல்தீப் யாதவின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here