பிரக்யான் நிலவிலிருந்து அனுப்பப்பட்டதாக பரவிய வீடியோ பொய்யா.?

1 Min Read
பிரக்யான் நிலவிலிருந்து அனுப்பப்பட்டதாக பரவிய வீடியோ பொய்யா.?

இந்தியா கடந்த ஜூலை மாதம் விண்ணில் ஏவிய சந்திரயான்-3, ஆகஸ்ட் 23 அன்று வெற்றிகரமாக நிலவின் தென் துருவ மேற்பரப்பை தொட்டது. இதில் உள்ள “விக்ரம்” எனும் லேண்டர் நிலவில் தரையிறங்கியதும், அதிலிருந்து “பிரக்யான்” எனும் ரோவர் வாகனம் கீழிறங்கியது. திட்டமிட்டபடி பிரக்யான் ரோவர், நிலா குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை பூமிக்கு அனுப்பும். இந்நிலையில் சமூக வலைதளங்களில் நிலவிலிருந்து ரோவர் அனுப்பிய முதல் வீடியோ என சுமார் 03:03 நிமிடங்கள் ஓடும் ஒரு வீடியோ பரவியது. பாறை நிறைந்த சாம்பல் நிற மேற்பரப்பை காட்டிய இந்த வீடியோவை 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டு ரசித்தனர்.  

- Advertisement -
Ad imageAd image

ஆனால் இதனை ஆய்வு செய்த போது, இந்த வைரல் வீடியோவின் 02:40 நிமிடத்தின் போது “நாசா” (NASA) மற்றும் “மார்ஸ்” (செவ்வாய் கிரகம்) எனும் வார்த்தைகள் குறிப்பிடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை மேலும் ஆய்வு செய்ததில், செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்காவின் நாசா எனும் தேசிய வானியல் மற்றும் விண்வெளி அமைப்பு, அட்லஸ் வி-451 எனும் ராக்கெட்டில் 2011 நவம்பர் 26 அன்று அனுப்பி வைத்த விண்கலன், செவ்வாய் கிரகத்தில் ஆகஸ்ட் 5, 2012 அன்று தரையிறங்கியதும் அதன் ரோவர் வாகனமான, கியூரியாசிட்டி (Curiosity), தனது மாஸ்ட்-காம் (Mastcam) கேமரா மூலம் எடுத்து அனுப்பிய வீடியோ இது என தெரிய வந்துள்ளது.  

இந்த வீடியோவில் காணப்படும் சாம்பல் நிறமும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இணையதளத்திலும், சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் தருகின்ற தகவல்கள் அனைத்தையும் உண்மை என நம்புவது தவறு என இணையதள வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

Share This Article
Leave a review