- இரும்புதலை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய
குடமுழுக்கு விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம்,
பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ பத்ரகாளியம்மன் , மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயங்கள் பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் உதவியுடன் கோயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கின குடமுழுக்குவிழாவை முன்னிட்டு விக்னேஷ்வர பூஜையுடன்
முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று மகா பூர்ணாஹூதி நடைபெற்றது அதனை தொடர்ந்து மேள தாழங்கள் முழங்க கடம்புறப்பாடு, நடைபெற்றது தொடர்ந்து விமான கலசம் மற்றும் மூலவர், பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது . இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காரணாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.