தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் கிருஷ்ணன் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடந்து வருகிறது..
பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலராக கிருஷ்ணன் பணியாற்றிய போது அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது குறிப்பாக கொரோனா காலக்கட்டங்களில் ப்ளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானதை தொடர்ந்தே தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் இறங்கியுள்ளனர்..
தீயணைப்புத்துறை அலுவலகம் பின்புறம் கருவூல காலணியில், வசித்து வரும் கிருஷ்ணனின் வீட்டில் காலை ஆறரை மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்
லஞ்ச ஒழிப்பு சோதனைக்குள்ளாகியுள்ள கிருஷ்ணன் தர்மபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு உள்ளி்ட்ட இடங்களில் பிடிஓ வாக பணியாற்றியிருந்தார், தற்பொழுது பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார்.