மீன்களைத் தாக்கும் நோயைகளைக் கண்டறிவதற்கும் அவற்றை வகைப்படுத்துவதற்கும் அதிநவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட செயலியை மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, புதுதில்லியில் இன்று அறிமுகம் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், மீன்வளத்துறை செயலாளர் திரு ஜெ.என். ஸ்வைன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலும், தேசிய மீன் வள அமைப்பும் இணைந்து இந்த செயலியை உருவாக்கியுள்ளது.
மீன் விவசாயிகள், கள அதிகாரிகள் மற்றும் மீன் சுகாதார வல்லுநர்களைத் தடையின்றி ஒருங்கிணைக்கும் தளமாக இந்த செயலி செயல்படும். இதனைப் பயன்படுத்தும் விவசாயிகள் நேரடியாக மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் அறிவியல் வல்லுநர்களுடன் இணைப்பில் இருப்பார்கள்.
கடல்வாழ் உயிரினங்களின் நோய்களைக் கண்காணிக்கும் தேசிய திட்டத்தின் 2ம் கட்டமாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு பிரதமரின் மீன்வளத் திட்டத்தை அமல்படுத்த ரூ.33.78 கோடியை மீன்வளத்துறை ஒதுக்கியுள்ளது.