- தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதை தொடர்ந்து மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் என்ற முறையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அமைச்சர் பொன்முடி நியமனம் செய்யப்பட்ட பின்னர், உட்கட்சி விவகாரத்தின் காரணமாக அமைச்சர் பொன்முடிக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதன் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அமைச்சரவையில் 4 புதிய அமைச்சர்களும் ஒரு சில அமைச்சர்களுக்கு இலாக மாற்றப்படும் கூடுதலாக இலாகா ஒதுக்கப்பட்டும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்த அமைச்சரவை மாற்றத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவருக்கு( மாவட்டத்தில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவிற்கு உள்ளனர்) அமைச்சர் பதவி வழங்கப்படும் என மாவட்ட திமுக தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்போடு இருந்தனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/irregularity-in-granting-approval-to-cooperative-housing-society-houses-madras-high-court-has-imposed-an-interim-stay-on-the-order-issued-by-the-government-to- conduct-an-investigation-by-the-anti-cor/
ஆனால் அதை சிறிதும் கவனத்தில் கொள்ளாத கட்சி நிர்வாகம் சேலத்தை மாவட்டத்தை சேர்ந்தவருக்கு அமைச்சர் பதவி வழங்கியது. அதேபோல ஆளுநருடன் சில முரண்பட்ட கருத்துக்கள் உள்ளதால் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். இதனால்,கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மந்திரி சபை பட்டியலில் வாய்ப்பு வழங்காமல் புறக்கணிப்பது கட்சித் தொண்டர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.