நெற்றியில் ஏற்பட்ட காயம் , Fevikwik-கை பயன்படுத்திய தனியார் மருத்துவமனை…

2 Min Read
பிரவீன் சௌத்ரி

“இது மாதிரி எல்லாம் செய்ய எங்காவது ரூம் போட்டு யோசிப்பாங்களோ” -னு சொல்லுற மாதிரி சம்பவம் , தற்போது தெலுங்கானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது .

- Advertisement -
Ad imageAd image

நெற்றியில் அடிபட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்க சிறுவனை ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கிருந்த மருத்துவர் மற்றும் ஊழியர்கள் காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக பெவிகுயிக்கை தடவி காயத்தை ஒட்டவைத்து அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது .

தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வாளா  மாவட்டத்தில் உள்ள அலம்பூர் நகரை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா விவசாயி , இவருக்கு சுனிதா என்ற மனைவியும்  பிரவீன் சௌத்ரி என்ற 7 வயது மகனும் உள்ளார் .

இந்நிலையில் சமீபத்தில் உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொள்ள வம்சி கிருஷ்ணா குடும்பத்துடன் சென்றிருந்தபோது , அவரது மகன் பிரவீன் கால் இடறி கீழே விழுந்து நெற்றியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது .

சிகிச்சை அளித்த மருத்துவர்

இதனால் பதறிப்போன பெற்றோர் , சிறுவனை ஜோகுலம்பா கத்வாளா பகுதியிலுள்ள ரெயின்போ என்ற தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர் .

அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர் மற்றும் ஊழியர்கள் காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போட்டு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக , அலட்சியமாக பெவிகுயிக் பேஸ்டை பூசி காயமடைந்த பகுதியை ஒட்டவைத்து அனுப்பி உள்ளனர் .

அடிபட்ட கண் புருவ பகுதியில் தையல் போட்டதற்கான எந்த தடயமும் இல்லாததால் , சந்தேகம் அடைந்த வம்சி கிருஷ்ணா  , சிறுவனை வேறொரு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளார் . அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுவன் பிரவீனுக்கு முறையான சிகிச்சை ஏதும் அளிக்காமல் , அவருடைய புருவத்தை பெவிகுயிக் மூலம் ஒட்டி இருப்பதை கண்டறிந்தனர்.

அதனை உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததால் , அறுவை சிகிச்சை செய்து கண் புருவத்தில் ஒட்டப்பட்ட  பெவிகுயிக்யை அகற்றினர் .

இது தொடர்பாக பிரவீனின் தந்தை வம்சி கிருஷ்ணா அளித்த புகாரின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ரெயின்போ மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளார் . தொடர்ந்து இந்த அலட்சிய சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article
Leave a review