இந்திய மக்கள் தொகையின் விகிதம் நாட்டை கட்டமைக்கும் கருவி – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

1 Min Read
அமைச்சர் ஜிதேந்திர சிங்

இந்திய மக்கள் தொகையின் விகிதம் நாட்டை கட்டமைக்கும் கருவியாக இருக்கும் என்று  மத்திய அறிவியல்,  தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

வலிமையான, செழுமைமிக்க இந்தியாவை கட்டமைப்பதில் இளைஞர்கள் மட்டுமின்றி, ஓய்வூதியதாரர்கள் உள்பட மூத்த குடிமக்களையும் குறிப்பிட முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து புதுதில்லியில் நடைபெற்ற ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் ஒன்பதாம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தியாவின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 40 வயதுக்கு குறைவானவர்களாக இருந்தாலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவது புதுமையான எதார்த்தம் என்று கூறினார். அவர்கள் உடல் உறுதியுடனும், சுறுசுறுப்புடனும் மட்டுமல்லாமல், நிர்வாகத்தில் சிறந்த அனுபவம் கொண்டவர்களாக இந்தியாவின் 2047 தொலைநோக்குப் பார்வையில் பங்களிப்பு செய்பவர்களாக உள்ளனர் என்று அவர் தெரிவித்தார். இந்தியாவில் பணிபுரிபவர்களை விட, ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும், அவர்களுடைய ஓய்வுக்கு பிந்தைய மதிப்புமிக்க சேவை மிகச் சிறப்பாக இருக்கும் என்றும்  கூறினார்.

Share This Article
Leave a review