மீஞ்சூர் அருகே கொண்டக்கரை ஊராட்சி குருவிமேடு பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனம் சுடுகாட்டு இடத்தை ஆக்கிரமிப்பு.

2 Min Read
  • மீஞ்சூர் அருகே கொண்டக்கரை ஊராட்சி குருவிமேடு பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனம் சுடுகாட்டு இடத்தை ஆக்கிரமிப்பு. இறந்தவர் உடலை அடக்கம் செய்ய முடியாமல் உறவினர்கள் தவிப்பு. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டக்கரை ஊராட்சியில் அடங்கியது .குருவிமேடு கிராமம்.இக் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் கொண்டக்கரை ஊராட்சியில் இருந்து குருவிமேடு வரை சுமார் 15.க்கும் மேற்பட்ட பிரபல கண்டனர் யாட், பேக்கிங் எக்ஸ்போர்ட் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் உள்ளது. மூன்று கிலோமீட்டர் உள்ள தூரத்தில் இதுவரை இந்நிறுவனங்கள் சாலை அமைக்கவில்லை .சாலை அமைக்க ஊராட்சியிடம் நிறுவனம் நிதி கொடுத்ததாக கூறுகின்றனர். ஆனால் இதுவரை சாலை போடவில்லை. அங்குள்ள கிராமத்திற்கு அரசு மற்றும் தனியார் பேருந்து அல்லது மினி பஸ் ,ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் சென்று வர முடியாத சாலை உள்ளது . பள்ளிக்கு செல்ல வேண்டுமென்றால் சுமார் மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்று சுப்பா ரெட்டி பாளையம் மற்றும் வெள்ளிவாயல் சாவடி அரசு பள்ளியில் படிக்க செல்ல வேண்டும் .வெள்ளை சீருடை அணிந்து வந்தால் பள்ளிக்கு செல்லவே முடியாத தூசி படிந்து நிறம் மாறிவிடும் அவல நிலை உள்ளது..அவசர தேவைக்கும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் பணிக்கு செல்வதற்கும் பள்ளி கல்லூரி செல்லவும் மூன்று கிலோமீட்டர் நடந்து சென்று கொண்டைக்கரை மெயின் ரோட்டில் சென்று தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் குருவி மேடு கிராம சுடுகாடு எரி மேடு இருந்த இடத்தை இந்தியில் ஆயில் நிறுவனம் ஆக்கிரமித்து அந்த இடத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து கழிவுகளை கொட்டி வருகின்றனர் இந்த நிலையில் நேற்று கூலித் தொழிலாளி வெங்கடேசன் என்பவர் இறந்து விட்டார்.

அவரை உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டு இல்லாததால் சாலை ஓரத்திலேயே சடலத்தை எரிக்க உறவினர்களும் பெரியவர்களும் செய்தனர். இது சம்பந்தமாக கிராம மக்கள் தாசில்தார் உள்ளிட்ட மாவட்ட கலெக்டர் வரை கோரிக்கை மனு கொடுத்தும் புகார் செய்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை இரண்டு முறை கம்பெனி நிர்வாகம் பொன்னேரி வருவாய் துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை .இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உயிருடன் இருக்கும் போதும் எந்தவித நடவடிக்கை எடுக்காத இந்த மாவட்ட நிர்வாகம் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்யவோ எரிக்கவோ நிறுவனத்திடம் இடத்தை மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image
Share This Article
Leave a review