அதன் படி, ஒரு கட்சி தேசிய கட்சி அந்தஸ்து பெறுவதற்கு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்க வேண்டும் அல்லது அண்மையில் நடந்த தேர்தல்களில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் குறைந்தது 6 சதவீத வாக்குகளை அக்கட்சியின் வேட்பாளர்கள் பெற்றிருக்க வேண்டும்.
தேசிய கட்சி அந்தஸ்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட் புதுச்சேரியில் அங்கீகாரம் இழந்த பாமக தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு.
தேசிய வாத காங்., திரிணாமுல் காங்., மற்றும் இ.கம்யூ., உள்ளிட்ட மூன்று கட்சிகளின் தேசிய கட்சி அங்கீகாரத்தை தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. அதே நேரம் ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது.

ஒரு கட்சியை தேசிய கட்சியாக அங்கீகரிப்பதற்கு தேர்தல் ஆணையம் சில அளவீடுகளை வைத்துள்ளது. அதன் படி, ஒரு கட்சி தேசிய கட்சி அந்தஸ்து பெறுவதற்கு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்க வேண்டும் அல்லது அண்மையில் நடந்த தேர்தல்களில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் குறைந்தது 6 சதவீத வாக்குகளை அக்கட்சியின் வேட்பாளர்கள் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் நான்கு எம்.பி.க்களை பெற்றிருக்க வேண்டும்.
அல்லது மக்களவை தொகுதிகளில் மூன்று மாநிலங்களுக்கு குறையாமல் மொத்த இடங்களில் குறைந்தபட்சம் 2 சதவீத இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் உள்ளன.

இதில் எதையுமே பூர்த்தி செய்யாத நிலையில் இந்திய கம்யூனிஸ்ட், திரிணமுல், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தன. அதே சமயம் அண்மையில் பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தேசிய அந்தஸ்தை பெற்றுள்ளது. தேசிய அரசியலை நோக்கி பயணிக்கும் பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆந்திராவில் மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது. இதே போன்று புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியும் மாநில அந்தஸ்தை இழந்துள்ளது
இந்த அங்கீகாரம் கிடைத்தால், தேர்தல்களில் அனைத்து மாநிலங்களிலும் ஒரே சின்னத்தில் போட்டியிட முடியும்.