டீசல் கடத்தலில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகை இந்தியக் கடலோரக் காவல்படை கைப்பற்றியது!

0
29
பைபர் படகின் வலையை அறுத்து நடுக்கடலில் அண்ணன், தம்பியை கொலை செய்த விசைப்படகு மீனவர்கள்

மும்பைக்கு வடமேற்கே 83 கடல் மைல் தொலைவில் டீசல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய மீன்பிடிப் படகை இந்தியக் கடலோரக் காவல்படை உரிய ஆவணமில்லாத பணத்துடன் கைப்பற்றியது. சுங்கத் துறையிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தியக் கடலோரக் காவல்படையின் பிராந்தியத் தலைமையகம் (மேற்கு) நடவடிக்கையைத் தொடங்கியது, இது மகாராஷ்டிரா கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் மேம்பாட்டு பகுதிகள் உட்பட 200 சதுர மைல் பரப்பளவை உள்ளடக்கிய கணிசமான மீன்பிடி மற்றும் வணிக போக்குவரத்துக்கான பகுதியில் நடைபெற்றது.

இந்தியக் கடலோரக் காவல்படையின் இரண்டு விரைவு ரோந்து கப்பல்கள், ஒரு இடைமறிப்புப் படகு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நடவடிக்கையில், 2024, ஏப்ரல் 15 அன்று இரவு சந்தேகத்திற்கிடமான படகு கண்டுபிடிக்கப்பட்டது. டீசல் கடத்தும் நோக்கத்துடன் ஐந்து பணியாளர்களுடன் இந்தப் படகு 2024, ஏப்ரல் 14 அன்று மாண்ட்வா துறைமுகத்திலிருந்து புறப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

படகு

இந்தப் படகு 20,000 லிட்டர் வரை எரிபொருளை சேமித்து வைக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டிருப்பதும், தவறான / பல அடையாளங்களுடன் இயக்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடத்தல் டீசலுக்கு ஈடாக கடலோரப் பகுதிகளில் இருந்து செயல்படும் சில இந்தியக் கடலோர வாகனங்களுக்கு ரூ.11.46 லட்சம் வழங்கப்பட இருந்ததும் இந்த நடவடிக்கையில் தெரியவந்தது.

இந்தப் படகு 2024, ஏப்ரல் 17 அன்று அதிகாலையில் மும்பையில் நங்கூரமிடும் இடத்திற்குக் கொண்டு வரப்பட்டது. வருவாய்ப் புலனாய்வு, சுங்கத்துறை இயக்குநரகம், மாநில காவல்துறை ஆகியவற்றுடன் கூட்டு விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here