- இந்தியா vs வங்காளதேசம் 1வது டெஸ்ட் 3வது நாள்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டின் மூன்றாவது நாளான சனிக்கிழமையன்று, இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களை எட்டியுள்ளது.
இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 227 ரன்கள் முன்னிலை பெற்றது. அடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடத் துவங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா மோசமான துவக்கம் அளித்தனர். ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ரோஹித் சர்மா 5 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
விராட் கோலி 17 ரன்களுடன் நடையை கட்டினார். இந்திய அணி 67 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து ஆடினர். முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணியின் முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் 5 பேட்ஸ்மேன்கள் சொதப்பியதைப் போல மீண்டும் நடக்குமோ? என்ற அச்சம் இருந்தது.
சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் அபாரமாக ஆடினர்.
ஷுப்மான் கில் (119 பேட்டிங்) மற்றும் கே.எல் ராகுல் (22 பேட்டிங்) மற்றும் ரிஷப் பந்த் (109) ஆட்டம் இழந்தார் .
சுப்மன் கில்லுடன் ஒத்துழைத்து ஆடிய ரிஷப் பண்ட்டும் சதம் அடித்தார்.
வெள்ளிக்கிழமை, பங்களாதேஷ் தனது முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, 227 ரன்கள் என்ற மிகப்பெரிய முதல் இன்னிங்ஸ் முன்னிலை வழங்கியது .
இந்தியா முதல் இன்னிங்சில் 376 ரன் எடுத்திருந்தது.
பின்னர் 514 என்ற இமாலய இலக்கை இந்தியா நிர்ணயித்தது.
தற்போது வங்காளதேசம் அணி 33 ரன்களில்
விக்கெட் ஏதும் இன்றி ஆடிகொண்டிடுகிறது.