- கௌதம் கம்பீர் போட்ட திட்டத்தால்தான், இந்தியா அபாரமாக செயல்பட்டு வருவதாக மோர்னே மோர்கல் பேசியுள்ளார்.
கான்பூர்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் ஆடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டரை நாள் ஆட்டம் மழையால் தடைபட்ட நிலையில், கடைசி இரண்டு நாட்கள் ஆட்டம் மட்டுமே நடைபெற உள்ளது.
அதனால் போட்டியில் முடிவு எட்டப்படாது, போட்டி டிராவில் முடிவடைய வாய்ப்பு அதிகமாக உள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அம்பயர்கள் சில முடிவுகளை எடுத்து உள்ளனர்.
கடைசி இரண்டு நாட்கள் ஆட்டத்துக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி உள்ளனர் அம்பயர்கள். டெஸ்ட் போட்டியின் ஒரு நாளில் குறைந்தபட்சம் 90 ஓவர்கள் வீசப்பட வேண்டும்.
ஆனால், இந்தப் போட்டியில் இரண்டரை நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டு இருப்பதால் கடைசி இரண்டு நாட்களில், ஒவ்வொரு நாளிலும் 98 ஓவர்கள் வீசப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் இந்தப் போட்டியில் முடிவு எட்டப்பட ஓரளவு வாய்ப்பு உள்ளது. இந்திய அணியே இந்தப் போட்டியில் வெற்றி பெறும் என கருதப்படுவதால் இது இந்திய அணிக்கு சாதகமான முடிவாக பார்க்கப்படுகிறது மேலும், 9.30 மணி முதல் 4.30 மணி வரையில் நடக்க வேண்டிய ஒரு நாள் ஆட்டத்தில் 30 நிமிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. கான்பூர் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டம் 9.30 மணி முதல் மாலை மணி வரை நடைபெறும் என அம்பயர்கள் அறிவித்து உள்ளனர்.
அதற்கேற்ப போட்டியின் இடைவேளையிலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. காலை 9.30 மணி முதல் 11.45 வரை முதல் பகுதி ஆட்டம் நடைபெறும். பின்னர் மதிய இடைவேளை விடப்படும். அடுத்து மதியம் 12.25 முதல் 2.40 வரை இரண்டாவது பகுதி ஆட்டம் நடைபெறும். பின்னர் தேநீர் இடைவேளை விடப்படும்.
மதியம் 3 மணி முதல் 5 மணி வரை மூன்றாவது மற்றும் கடைசி பகுதி ஆட்டம் நடைபெறும். அத்துடன் அந்த நாள் முடிவுக்கு வரும். இவ்வாறு அம்பயர்கள் கூடுதல் ஓவர்கள் மற்றும் கூடுதல் நேரத்தை திட்டமிட்டு உள்ளனர்.
இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 35 ஓவர்கள் பேட்டிங் செய்து 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் சேர்த்து இருந்தது.
முதல் மூன்று நாட்கள் ஆட்டத்தில், மொத்தமே 37 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. வங்கதேச அணி, 3 விக்கெட்களை மட்டுமே இழந்திருந்தது. இதனால்,
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை, இந்தியாவால் டிரா தான் செய்ய முடியும் எனக் கருதப்பட்ட நிலையில்,
நான்காவது நாள் ஆட்டத்தில், வங்கதேசத்தை 233 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா, அடுத்துக் களமிறங்கி 285/9 ரன்களை எடுத்து, டிக்ளேர் அறிவித்தது. அடுத்த இரண்டு நாள் ஆட்டம் நடைபெறாத நிலையில், நான்காவது நாளில் வங்கதேச அணி 233 ரன்களை எடுத்து உள்ளது .
இதை அடுத்து களமிறங்கிய இந்திய அணி அபாரமாக விளையாடி டி20 கிரிக்கெட் போல் ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தன. ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 72 ரன்களும், கேஎல் ராகுல் 43 பந்துகளில் 68 ரன்களும், விராட் கோலி 35 பந்துகளில் 47 ரன்களும் குவித்தனர். இதனால் இந்திய அணி 34.4 ஓவர்களில் எல்லாம் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து வங்கதேச அணி 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களுடைய இரண்டாவது இன்னிங்சை நேற்று தொடங்கியது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 26 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து ஐந்தாவது நாள் தொடக்கத்தில் வங்கதேசத்தை குறைந்த ஸ்கோரில் சுருட்ட வேண்டும் என்ற உத்வேகத்துடன் இந்தியா களமிறங்கியது. மோமினுல் ஹக் இரண்டு ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து நட்சத்திர வீரர் ஜடேஜா அபாரமாக செயல்பட்டு கேப்டன் நஜ்முல் ஹுசைன், லிட்டன் டாஸ் மற்றும் சாகிபுல் ஹசன் ஆகியோர் விக்கெட்டுகளை சீரான இடைவேளையில் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் வங்கதேச அணி தடுமாறி வருகிறது. தற்போது வங்கதேச அணியில் அனுபவ வீரர் முஸ்பிகுர் ரஹிம் மட்டும் கடைசி விக்கெட்டை போராடி ஆட்டம் இழந்தார் .
முஸ்பிகுர் ரஹீம் கடைசி வரை நின்று 37 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதன் மூலம் 47 ஓவர் முடிவில் வங்கதேச அணி 146 ரன்களில் சுருண்டது. இந்திய பந்துவீச்சு தரப்பில் அஸ்வின், ஜடேஜா, பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதனையடுத்து இந்திய அணி வெற்றி பெற 95 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் 60 ஓவர்கள் மேல் எஞ்சியுள்ளதால், இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
திடீர் ட்விஸ்ட்டாக இந்தியா தொடர்ந்து அதிரடியாக செயல்பட்டு, வெற்றிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது…