மார் 3 மாதங்களாக மோசமான இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசு விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில்
முதலில் எதிர்க்கட்சி எம்பிக்கள் “மணிப்பூர், மணிப்பூர்” என்ற முழக்கங்களை எழுப்ப தொடங்கினர். அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருக்கும் போதே, அதற்குப் போட்டியாக ஆளும் தரப்பு எம்பிக்கள் “மோடி, மோடி” என்ற பிரதமரின் பெயரைக் கோஷமிட்டனர்.
அடுத்தாண்டு நடக்கும் மக்களவை தேர்தலை எதிர்க்கட்சியினர் பலரும் ஒரே அணியில் இருந்து எதிர்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி என பல்வேறு எதிர்க்கட்சிகளும் தங்கள் முரண்களைத் தாண்டி ஒரே அணியில் இணைந்துள்ளனர். இந்தக் கூட்டணிக்கு “இந்தியா” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதை உணர்த்தும் வகையிலேயே முதலில் மணிப்பூர் எனக் கோஷமிட்ட எம்பிக்கள் பிறகு “இந்தியா” எனக் கோஷமிட ஆரம்பித்தனர்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் வெற்றிகள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்தது. எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் பாகுபாடு அரசியலைக் கையில் எடுத்துள்ளதாகவும் ஜெய்சங்கர் சாடினார்.
இதன் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எதிர்க்கட்சிகள் பாகுபாடு செய்யும் அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் சாதனைகளை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
நீங்கள் ‘இந்தியா’ என்று பெயரிட்டுக் கொண்டு, இந்தியாவின் தேசிய நலன்களுக்குச் செவிசாய்க்கத் தயாராக இல்லை என்றால் உங்களை என்ன சொல்வது” என்று அவர் சாடினார்.
இதற்குப் பதிலடி கொடுத்த ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு ராஜஸ்தானில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவர் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க விரும்பவில்லை. அவர் நாடாளுமன்றத்தை அவமரியாதை செய்கிறார்” என்று விமர்சித்தார்.
சரியாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் முன்பு தான், மணிப்பூர் வீடியோ வெளியானது. இது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவை நடவடிக்கைகளை முடக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பேசிக் கொண்டிருந்த போது, எதிர்க்கட்சியினர் “இந்தியா” எனக் கோஷமிட, பாஜகவினர் “மோடி” என மாறி மாறி கோஷமிட்டனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மோசமான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் பலரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நாட்டின் வெளியுறவுக் கொள்கை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பேசிக் கொண்டிருந்த போது எதிர்க்கட்சி எம்பிக்கள் “இந்தியா, இந்தியா” என்று கோஷமிட்டனர்.
அதற்குப் போட்டியாக பாஜகவைச் சேர்ந்த எம்பிக்களும் “மோடி, மோடி” என்ற கோஷமிட்டனர். நாடாளுமன்றத்தில் இப்படி இரு தரப்பினரும் “இந்தியா”, “மோடி” என்று மாறி மாறி கோஷமிட்டுக் கொண்டனர்.