ஐசிசி உலக கோப்பை ஒரு நாள் போட்டித் தொடரின் 33வது லீக் ஆட்டத்தில் இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடர்ச்சியாக 7வது வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம் போல் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் கள்ம் கண்டனர்.மதுஷங்கா வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ரோகித். அதனால் ஆர்ப்பரித்த அரங்கம் அமைதியாகவும் முன்பே 2வது பந்தில் போல்டானார் ரோகித்.
எனவே அரங்கம் அமைதியானது. அடுத்து வந்த கோலி முதல் ஓவரின் கடைசி பந்தில் பவுண்டர் அடித்து கணக்கை தொடங்கினார். கூடவே 2, 4வது ஓவர்கள் மெய்டன் ஓவராகிப் போனது. கீல் 5 வது ஓவரில் தான் சந்தித்த 9வது பந்தில் முதல் ரன்னை பவுண்டரி மூலம் எடுத்தார். அதன் பிறகு கோலியும் கில்லும் பொறுப்புடன் விளையாடினர்.இருவரும் 2வது விக்கெட்டுக்கு 189 ரன் சேர்த்தனர். சதத்தை நெருங்கிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். கீல் 92 ரன், 88 ரன்னில் வெளியேறினர். அதன்மூலம் 50வது சதம் அடிக்கும் வாய்ப்பை இழுந்ததுடன், டென்டுல்கரின் சாதனையை முறியடிக்கும் நல்ல வாய்ப்பையும் கோலி இழந்தார்.

அடுத்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாசும், ராகுலும் 4வது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்தனர்.ராகுல் 21, சூரியகுமார் 12, ரன்னில் பெவிலியன் திரும்பினர். இடையில் சதத்தை நெருங்கிய ஸ்ரெயாஸ் 82 ரன்னில் ஆட்டம் இழந்தனர்.கடைசி ஓவரில் ஷமி 2, ஜடேஜா 35 ரன்னில் ரன் அவுட் ஆயினர். பும்ரா 1 ரன்னுடன் களத்தில் இருந்தார். இலங்கை தரப்பில் மதுஷங்கா மட்டும் 5 விக்கெட்களை அள்ளினார். கூடவே சமீரா ஒரு விக்கெட் எடுத்தார். இந்தியா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பு 357 ரன் குவித்தது. அதனையடுத்து 358 ரன் எடுத்தால் வெற்றி பெற முடியும் என்று சற்றே பெரிய இலங்கை விரட்ட ஆரம்பித்தது.
பும்ரா, சிராஜ் ஷமி வேகக் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இலங்கை முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததது. அணிவகுக்க, அந்த அணி 13.1 ஓவரில் 29 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து பரிதவித்தது. (5 டக் அவுட் இரண்டு பேர் 1 ரன், மேத்யூஸ் 12 ரன்) தீக்ஷனா ரஜிதா ஜோடி 9 விக்கெட்க்கு அதிகபட்சமாக 20 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ரஜிதா 14, மதுஷங்கா 5 ரன்னில் வெளியேற, இலங்கை 19.4 ஓவரில் 55 ரன்னுக்கு சுருண்டு 302 ரன் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. தீக்ஷனா 12 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்திய பந்துவீச்சில் ஷமி 5 ஓவரில் 1 மெய்டன் உள்பட 18 ரன்னுக்கு 5 விக்கெட் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார். சிராஜ் 3 பும்ரா, ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார். தொடர்ச்சியாக 7 வெற்றியை வசப்படுத்திய இந்தியா 14 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. முதல் அணியாக அரையிறுதிக்கும் தகுதி பெற்று அசத்தியது.