பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் மூன்றாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
அதே போல ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர் அரவிந்த் என்பவர் வசிக்கும் பிரிக்கால் அடுக்குமாடி குடியிருப்பில் வருமானவரித்துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சௌரிபாளையம் பகுதியில் உள்ள அரவிந்த் அலுவலகத்திலும் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. இதே போன்று தொண்டாமுத்தூர் பகுதியில் அரவிந்தின் மனைவி காயத்ரி நடத்தி வரும் போதை மறுவாழ்வு மையத்திலும் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளிலும் வருமான வரித்துறை சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சோதனை நாளையும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் அதிகாலையில் இருந்து ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. ஆளும் திமுக தரப்பில் இந்த ரெய்டு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தினர்.
திமுக ஆட்சிக்கு வந்த பின் இவர்களின் சொத்து உயர்ந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜி ஸ்கொயர் விளக்கம்;
இது தொடர்பாக ஜி ஸ்கொயர் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு தவறானது. ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது அல்ல. ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுகவினர் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் அல்ல. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஜி ஸ்கொயர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்று கூறியது.