கோவையில் பிரபல தொழிலதிபரான லாட்டரி மார்ட்டின் தொடர்பான இடங்களில் 5நாட்களாக நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை இன்று நிறைவு பெற்றது.

கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில், தொழிலதிபர் மார்ட்டின் வீடு உள்ளது. அதன் அருகில் மார்டின் ஹோமியோபதி மருத்து கல்லூரி மற்றும் மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனிஸ் அண்ட் இன்ஸ்டியூசன் என்ற பெயரில் கார்ப்ரேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 12 ஆம் தேதி மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், அனைத்து தொலைபேசி மற்றும் கைபேசி இணைப்புகளை துண்டித்தனர்.
லாட்டரி விற்பனையில் மூலம் விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாகவும் கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறை அதிகாரிகள், மார்ட்டின் மீது கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காவல் துறையில் வழக்குப்பதிவு செய்தது. தற்போது மார்ட்டின் தொடர்பான இடங்கள் மற்றும் அலுவலகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் கொடி கட்டி பறக்கும் சாண்டியாகோ மார்ட்டின் என்பவர்,நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக லாட்டரி சீட்டு அச்சடித்து முறைகேடாக பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
மேலும் 5 நாட்கள் இரவு பகலாக அங்கேயே தங்கி இருந்து அதிகாரிகள் சோதனை நடைபெற்றது.இன்று காலை 11 மணியளவில் மார்ட்டின் வீட்டில் இருந்து அதிகாரிகள் கிளம்பி சென்றனர்.லாட்டரி சீட்டு அச்சு அடித்தது மற்றும் விற்பனை தொடர்பான பல ஆவணங்களை கைப்பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.அதன் முழு விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.