நடப்பு கல்வியாண்டில், பள்ளிகள் 07.06.2023 அன்று திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு, அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,அவர்கள் உத்தரவு.

1 Min Read
ஆட்சித்தலைவர்

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை, உயர் / மேல்நிலைப் பள்ளிகள்  கோடை விடுமுறை முடிந்து வரும் 07.06.2023 அன்று திறக்கப்பட உள்ளதால் பள்ளி வளாகத் தூய்மை, வகுப்பறைகள் தூய்மை, கழிப்பறைகள் தூய்மை, குடிநீர் தொட்டிகள் தூய்மை, மின்கசிவு பராமரிப்பு, ஆபத்தான மரக்கிளைகள் அகற்றப்பட்டிருத்தல் வேண்டும்.
பள்ளியில் பழுதான கட்டிடத்தில் மாணவர்களை அமரச் செய்யாமல் கட்டாயம் தடுப்பு அமைத்திருத்தல் வேண்டும். நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்களை (NREGP) பயன்படுத்தி பள்ளிகளில் தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளை செய்திருத்தல் வேண்டும்.
அனைத்து நிலைகளிலும் பள்ளிகள் தயார் நிலையில் உள்ளனவா என்பதை கண்காணிக்கும்பொருட்டு (சரிபார்ப்பு பட்டியலைக் கொண்டு) விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் தலைமையில் 154 அலுவலர்களைக் கொண்ட குழுவினர் 1492 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை வருகின்ற ஜுன் 01-ஆம் தேதி முதல் நேரிடையாக ஆய்வு செய்யப்பட உள்ளனர்.
எனவே ஆய்வுக்கு முன் அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களும் மேற்கண்ட பராமரிப்பு பணிகளை முடித்து பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி அவர்கள் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image
Share This Article
Leave a review