செம்மரம் கடத்தல் போலீசார் கொலை வழக்கில் ஒருவர் சரண்

2 Min Read
ராமன்

ஆந்திராவில் செம்மர கடத்தலை தடுத்த போலிசாரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒருவர் சரண்.

- Advertisement -
Ad imageAd image

ஆந்திர மாநிலம் திருப்பதி, கடப்பா, பாக்ரா பேட்டை உள்ளிட்ட சேஷாசலம் வனப்பகுதியில் விலை உயர்ந்த ஏராளமான செம்மரங்கள் உள்ளன.
செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் அதிக அளவு மவுசு இருப்பதால் செம்மரங்களை வெட்டி கடத்தல் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

செம்மரம்

இந்த நிலையில் அன்னமய்யா மாவட்டம், பிலேரூ அருகே உள்ள குண்ட்ராவாரி பள்ளி அருகே உள்ள சோதனை சாவடியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அதிகாலை 5 மணிக்கு அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் காரை மறித்தனர்.
ஆனால் கார் நிற்காமல் சென்றது. இதனை கண்ட கணேஷ் என்ற போலீஸ்காரர் காரை தடுத்து நிறுத்த முயன்றார்.

இதனால் ஆத்திரமடைந்த செம்மர கடத்தல் கும்பல் காரை கணேஷ் மீது மோதினர். இதில் படுகாயம் அடைந்த கணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து காரில் இருந்த செம்மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேர் வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர்.இதற்கிடையில் காவலர் கணேஷ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை விரட்டிப் பிடித்த அதிரடிப்படை போலீஸார், அதிலிருந்த இருவரை கைதுசெய்தனர். அத்துடன் அந்த காரையும், அதிலிருந்த 7 செம்மரங்களையும் கைப்பற்றினர். கைதுசெய்யப்பட்ட இருவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களுடன் வந்த 5 பேர் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

கணேஷ்

அதனடிப்படையில் கொலை, கடத்தல் உள்ளிட்ட 12 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்த அன்னமய்யா போலீஸார், தப்பித்து ஓடிய அந்த ஆறு பேரையும் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில்தான் அந்த ஆறு பேரில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும், கள்ளக்குறிச்சி மாவட்டம், இன்னாடு பஞ்சாயத்து, மேல்நிலவூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவர், விழுப்புரம் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நீதிபதி அகிலா முன்பு சரணடைந்திருக்கிறார்.

இந்த வழக்கில் தொடர்புடைய கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்த அவரை இந்த மாதம் 19 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Share This Article
Leave a review