- சென்னையில் கஞ்சா விற்ற வழக்கில் இருவரை விடுதலை செய்து சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள காந்தி இர்வின் சாலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்ததாக எழும்பூர் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவல் அடிப்படையில் ஆய்வில் ஈடுபட்ட காவல்துறையினர் ஆட்டோவில் 80 கிராம் பொட்டலங்களாக வைத்து கஞ்சா விற்கபட்டது கண்டுபிடிக்கபட்டது. முனிவேல் என்பவரும் அவரது அண்ணன் மகன் விமல் என்பவரும் கஞ்சா விற்பனை செய்த கைது செய்த காவல்துறை அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/opposition-to-silicon-ore-sand-mining-with-police-permission-more-than-500-people-gather-and-protest/
இவர்களுக்கு எதிரான வழக்கு சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஹெர்மீஸ் விசாரித்து தீர்ப்பளித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் காவல்துறை தரப்பில் சந்தேகத்திற்கு இடம் இன்றி நிரூபிக்கப்படவில்லை எனவே சந்தேகத்தின் பலன்களை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து அவர்களை விடுதலை செய்ததாக தீர்ப்பளித்துள்ளார்.