- தஞ்சாவூரில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் மாவட்டத்தலைவர் வடிவேல் தலைமையில் நடைபெற்றது,கடந்த ஓராண்டாக சிறு சிறு பிரச்சனைகளை காரணம் காட்டி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்தும், பல தலைமை ஆசிரியர்களை இடமாறுதல்களை செய்தும் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது, மாணவர்களே தவறு செய்தாலும் தலைமை ஆசிரியர்கள் பழிவாங்கபடுகிறார்கள்.
தலைமை ஆசிரியர்களை பழிவாங்கும் செயலை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்பாட்டம் நடந்தது,இதில் மாவட்ட செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்ட மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
அதன்படி தஞ்சாவூர் தென் கீழ் அலங்கம் பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து பள்ளியில் பணிபுரிந்தனர். அதைத்தொடர்ந்து நேற்று மாலை தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நேற்று தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக ஆசிரியர்கள் பள்ளிகளில் கருப்பு பட்டை அணிந்து தங்களது பணிகளை செய்தனர்.