- சென்னை மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ காவலர் நித்தியா ஆகியோர் வழக்கு சம்பந்தமாக இன்று அதிகாலை சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்றுள்ளனர்.
அப்பொழுது செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சிறு நாகலூர் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த கார் வேகமாக மோதி இழுத்துச் சென்றுள்ளது.
இதில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ உயிரிழந்தார் படுகாயம் அடைந்த மற்றொரு பெண் காவலர் நித்தியா அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் .
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/bail-waived-for-chandra-mohan-and-dhanalakshmi-for-misbehaving-with-police-at-marina/
சிகிச்சை பலன்றி மருத்துவமனையில் உயிரிழந்தார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மதன் குமாரை கைது செய்து மேல்மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.