கடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன். மிக நீண்ட காலமாக இவர் திமுகவில் இருந்து வருகிறார்.தொகுதிமக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.கட்சிக்காரர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர்.எல்லோரிடமும் பழகக்கூடியவர்.தனிப்பட்ட முறையில் இவருக்கென்று எதிரிகள் யாரும் கிடையாது.இந்த நிலையில் ஐயப்பன் எம்.எல்.ஏ கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அரசு விழாக்கள் மற்றும் கட்சிகூட்டங்கள் பொது நிகழ்வுகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
இதற்கிடையே நேற்று கட்சி நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் இல்ல விழாக்களில் கலந்து கொள்வதற்காக திமுக நிர்வாகிகளுடன் விழாக்களுக்கு சென்றார். இதற்கிடையே கடலூர் அருகே கடலூர் – புதுச்சேரி எல்லையில் உள்ள கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லாத்தூர் கிராமத்தில் திமுக நிர்வாகி ஒருவரின் இல்ல விழாவிற்கு எம்எல்ஏ ஐயப்பன் தனது ஆதரவாளர்களுடன் சென்றிருந்தார் இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் மண்டபத்தின் உள்ளே அழைத்து சென்றனர்.

அவர்கள் உள்ளே சென்ற சில நொடிகளில் திடீரென அதிபயங்கர சத்தம் ஏற்பட்டது.என்ன சத்தம் என்று வெளியே வந்து பார்த்த போது பெட்ரோல் குண்டு ஒன்று மண்டபத்தின் வெளியே இருந்து வீசப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டு மண்டபத்தின் வரவேற்பு பகுதியில் உள்ள இடத்தில் விழுந்ததால் எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் திமுகவினர் விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் அங்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது .தகவலறிந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தீவிர படுத்தினர். இதற்கு இடையே மண்டபத்துக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து ஐயப்பன் எம்எல்ஏ வை பாதுகாப்பாக திமுகவினர் அங்கிருந்து அவரது வீட்டிற்கு அழைத்து வந்தனர். இத்தகவல் காட்டு தீ போல் பரவியது அடுத்து கடலூர் மற்றும் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐயப்பன் எம்எல்ஏ வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான திமுகவினர் திரண்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பெட்ரோல் குண்டு வீச்சு எதற்காக நிகழ்த்தப்பட்டது யார் குண்டுவீச்சில் ஈடுபட்டிருப்பார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திமுக கட்சியினர் இந்த சம்பவத்தில் ஏடுபட்டார்களா அல்லது வேறு கட்சியினருக்கு இதில் தொடர்பு இருக்குமோ என சந்தேகிக்கின்றனர்.இது வரை கடலூர் மாவட்டத்தில் எந்த கட்சிக்காரர்களுக்கு இது போல சம்பவம் நிகழ்ந்ததில்லை என்கின்றனர் அந்த பகுதி கட்சியினர்.திமுக தலைமை தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்கின்றனர் கட்சியினர்.