- ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் கிராமத்தில்
1957 லில் அரசியல் கலவரத்தில் கொல்லப்பட்ட ஐந்து நபர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த அனுமதி வழங்க உத்தரவிட கோரி மனு தாக்கல்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
முதுகுளத்தூர் பகுதியைச் சார்ந்த குணசேகர பாண்டியன் தாக்கல் செய்த மனு.தென் பாண்டிய மண்டலத்தில் சேதுபதி மன்னர்கள் ஆட்சிக்கு உட்பட்ட 448 கிராம மறவர் சமூகம் ஒன்று சேர்ந்து ஆப்பநாடு மறவர் சங்கம் என்ற கட்டமைப்பை உருவாக்கினார்கள் இதில் இந்த சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்த சங்கம் நூற்றாண்டுகளைக் கடந்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 1957 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் பார்வர்ட் பிளாக் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட அரசியல் கலவரத்தில் ஃபார்வர்ட் பிளாக் கட்சி சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டனர் அதில் கீழத்தூவல் கிராமத்தை தவசியாண்டி ஜெகநாத் சிவமணி சித்திரவேலு முத்துமணி ஆகிய ஐந்து நபர்கள் ஆவார்கள்.
இவர்கள் ஐந்து பேர் நினைவாக இந்த ஒவ்வொரு செப்டம்பர் 14ஆம் தேதியும் ஆதி தமிழர்கள் முறைப்படி பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கீழத்தூவல் கிராமத்தில் உள்ள இந்த வழிபாட்டு நிகழ்வு நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்து வருகின்றது குறிப்பாக வெளியூரிலிருந்து வந்து இந்த நினைவு அஞ்சலி கூட்டத்திற்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
எனவே அனைத்து பகுதியில் இருந்தும் வந்து கீழத்துவல் கிராமத்திற்கு வந்து செப்டம்பர் 14ஆம் தேதி பொங்கல் வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இந்த விழாவிற்கு அனுமதி வழங்க முடியாது தற்போது ராமநாதபுரத்தில் இரண்டு குரு பூஜைகள் நடைபெற்று வருகிறது எனவே இங்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க சிரமம் ஏற்படும் மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அனுமதி வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.
விசாரணை செய்த நீதிபதி மனுதாரர் புகார் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளார்.