கரூர் மாவட்டத்தில். 12 குவாரிகளில் முறைகேடாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதை கண்டறிந்த மாவட்ட நிர்வாகம் 44,65,28,357 அபராதம்

1 Min Read
கல் குவாரி

கரூர் மாவட்டத்தில். 12 குவாரிகளில் முறைகேடாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதை  கண்டறிந்த மாவட்ட நிர்வாகம் 44,65,28,357 அபராதம் விதித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில்  பட்டா நிலங்களில் 76 சாதாரண கல்குவாரிகளுக்கும், அரசு புறம்போக்கு நிலங்களில் 3 கல்குவாரிகளுக்கும் உள்ளன.

- Advertisement -
Ad imageAd image

இதில் பல குவாரிகளில் சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக புகார் வந்ததையடுத்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்களின் ஆய்வின்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டு உரிய அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், நில அளவை மற்றும் பதிவேடுகள்துறை உதவி இயக்குநர் வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகிய அலுவலர்கள் அடங்கிய குழு அண்மையில் மேற் கொண்ட ஆய்வில்  42 குவாரிகளில் விதிமீறல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில், 12 குவாரிகளுக்கு   ரூ.44,65,28,357/- (ரூபாய் நாற்பத்தி நான்கு கோடியே அறுபத்தி ஐந்து இலட்சத்து இருபத்தி எட்டாயிரத்து முன்னூற்றி ஐம்பத்தி ஏழு மட்டும்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
30 குவாரி அபராதம் விதிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதில்,  ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற  உறுப்பினரான பழனியாண்டிக்கு சொந்தமான குவாரியிலும் அதிகாரிகள் விதிகளை மீறி கனிமம் வெட்டி எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இவருடய கல் குவாரியில், 5,36,250 கன மீட்டர் சாதாரண கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக அறியப்பட்டது.
இதையடுத்து 23,54,14,500 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முறைகேடாக எத்தனை கல்குவாரிகள் இருந்தாலும் அவை மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Share This Article
Leave a review