டெல்லி மதுபான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி தலைவரும் அந்த மாநில முதல்வருமான கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களை குறிவைக்கும் ஒன்றிய அரசு தனக்கு மிரட்டல் விடுத்திருப்பதாக டெல்லி அமைச்சர் அடிசி பகீர் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.

டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை, ஆம் ஆத்மி தலைவர்களை குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

பாஜக

இந்த வழக்கில் இதுவரை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மாஜி துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெஜ்ரிவால் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், டெல்லி அமைச்சர், அடிசி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது;- மதுபான கொள்கை விவகாரத்தில் கெஜ்ரிவால், சிசோடியா அமைச்சர் சத்யேந்தர் சிங், எம்.பி சஞ்சய் சிங் ஆகிய 4 முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டதும், ஆம் ஆத்மி கட்சி சிதைந்து விடும் என பாஜக நினைத்தது. ஆனால் அது நடக்கவில்லை.

டெல்லி அமைச்சர் அடிசி குற்றச்சாட்டு

இதனால் கட்சியின் அடுத்த கட்ட தலைவர்களுக்கு குறி வைத்துள்ளது. அடுத்ததாக என்னையும், அமைச்சர் சவுரத் பரத்வாஜ் எம்.எல்.ஏ துர்கேஷ் பதக், மாநிலங்களவை எம்பி ராகவ் சதா ஆகியோரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக எனக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் மூலம் என்னை அணு எனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றவும் மேம்படுத்தவும் பாஜகவில் சேருமாறும், இல்லாவிட்டால் ஒரு மாதத்தில் கைதாக தயாராக இருக்கும்படியும் மிரட்டியது.

ஒன்றிய அரசு

எனவே வரும் நாட்களில் அமலாக்கத்துறை எனது வீட்டிலும் எனது உறவினர்களிடமும் விசாரணை நடத்தலாம். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். நாங்கள் கெஜ்ரிவாலின் வீரர்கள், பகத்சிங்கின் சீடர்கள்.

அப்போது நாட்டை காப்பற்றவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் ஆம் ஆத்மின் கடைசி தொண்டன் வரையிலும் போராடுவான். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த இந்தியா கூட்டணி கட்சிகளின் மெகா கண்டன போராட்டத்தால் பாஜக திணறி உள்ளது.

டெல்லி அமைச்சர் அடிசி

கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்தால் பொய் வழக்குகளில் முதல்வர்களை சிறைக்கு அனுப்புவதன் மூலம் பாஜக எளிதாக எதிர்க்கட்சி அரசுகளை கலைத்து விடும் வழக்கத்தை வாடிக்கையாக்கி விடும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச் தேவா கூறுகையில்;- மதுபான கொள்கை ஊழலில் அனைத்து ஆம் ஆத்மி தலைவர்களும் சம்மந்தப்பட்டுள்ளனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here