தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு எதிரான செயல்களில் திமுக அரசு செயல்பட்டால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக செயல்படுவோம் தஞ்சையில் தமிழக காவேரி விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் பேட்டி
தஞ்சையில் தமிழக காவேரி விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் பி ஆர் பாண்டியன் தலைமை தாங்கினார் அப்பொழுது அவர் செய்தியாளரிடம் கூறும் பொழுது.

திமுக அரசு பொறுப்பேற்ற காலத்திலிருந்து இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத அளவிற்கு தமிழகத்தில் விவசாயிகள் மீது தாக்குதல் நடைபெற்று கொண்டுள்ளது, விவசாய நிலங்களை அபகரித்து கார்ப்பரேட் நிறுவனம் இடம் ஒப்படைக்கும் வேலையில் திமுக அரசு ஈடுபட்டுக் கொண்டுள்ளது, சிப்காட் நிறுவனத்திற்கு நிலங்கள் எடுப்பதற்காக இதற்கு காவல்துறையை பயன்படுத்தி வருகின்றது, நில ஒருங்கிணைப்பு சட்டம் என்ற பெயரில் மொத்த விவசாய நிலங்களையும் அபகரிக்க காவல்துறையை இந்த திமுக அரசு பயன்படுத்துகிறது, சிப்காட் நிறுவனத்தை எதிர்த்து போராடும் விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அச்சுறுத்தும் நடவடிக்கையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது, இந்த திமுக அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதை மாற்றிக் கொள்ள வேண்டும், ஆனால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக செயல்படுவோம் என தமிழக காவிரிகள் விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் தஞ்சையில் கூறினார்.

விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டம்,கர்நாடகாவில் இருந்து காவிரிக்கு தண்ணீர் பெற்றுத் தராத நிலை, என தொடர்ந்து யார் ஆட்சிக்கு வந்தாலும் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாகவும். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் அரசியல் கட்சிகளுக்கு சரியான பாடம் புகட்டும் நிலைப்பாட்டை விவசாயிகள் எடுப்பது சரிதான். எந்த அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது அப்படி ஈடுபட்டால் விவசாயிகளின் முடிவு வேறு மாதிரியாக இருக்கும்