அண்ணாமலை

பாராளுமன்ற தேர்தலுக்கான சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி பாஜக செயல்வீரர்கள் கூட்டம் கோவை சிங்காநல்லூர் பகுதியில் நடைபெற்றது.

அதில் பங்கேற்று பேசிய பாஜக மாநில தலைவரும் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை,1952-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கும் தற்போது நடைபெறும் 2024 தேர்தலுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளதாக கருதபடுகிறது.

அண்ணாமலை

அன்று காங்கிரஸ் கட்சி மட்டும் தான் ஆட்சிக்கு வரும் என்ற நிலை இருந்தது போல் இன்று அனைவருக்கும் தெரியும் மோடி தான் பிரதமராவார் என்றும் குறிப்பிட்டார். கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டு தேர்தல்களில் மன்மோகன் சிங் தான் பிரதமராக வருவார் என்று தெரியாமல் தான் நாம் ஓட்டு போட்டோம்

ஆனால் 2014-ம் ஆண்டு மோடி தான் பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கையில் ஓட்டு போட்டோம் எனவும் 2019-ல் தமிழகத்தில் மட்டும் ஊடகங்களை வைத்து செயற்கையான மாயையை உருவாக்கினார்கள்.

அண்ணாமலை

கடந்த 2004-ல் எங்களிடம் 35 எம்பிக்கள் உள்ளோம். அதனால் பணம் வரக்கூடிய துறைகளை எல்லாம் எங்களிடம் கொடுங்கள் என திமுகவினர் கேட்டு வாங்கினார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் மம்தா, திமுக போன்றோர் நாட்டை வெட்டி கூறு போட்டு விட்டதாகவும் 2ஜி விவகாரத்தில் அலைக்கற்றை கொள்கையை மாற்றிய ஆ.ராசா பிரதமரை எதிர்த்து திட்டம் போட்டதாகவும் எல்லா கட்சியினரும் வாய் பேச முடியாத பிரதமரை கொடுங்கள் என்பதில் தான் ஒற்றுமையாக இருந்தார்கள் என தெரிவித்தார்.

அண்ணாமலை

இன்று பிரதமர் மோடியை யாராலும் மிரட்டி பணிய வைக்க முடியாது, அந்த ஆண்டவனே இறங்கி வந்தால் தான் அவரை மிரட்டி பணிய வைக்க முடியும். அது கூட அவர் பணிவாரா என்பது தெரியவில்லை எனவும் சுட்டிகாட்டினார்.

கடந்த 1980-ல் அரைத்த மாவையே தற்போது இந்த தேர்தலிலும் திமுக வினர் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் இந்த தேர்தலை போல் இன்னொரு தேர்தல் வருமா என சொல்ல முடியாது. ஆனால் மோடியை போல் இன்னொது தலைவரை பார்க்க முடியாது.

அண்ணாமலை

இந்த சரித்திர தேர்தலை விட்டு விட்டால் தமிழகத்தின் வளர்சிக்கான தேர்தல் இனி இல்லை எனவும் தெரிவித்தார்.

நதிபோல் ஓடிக்கொண்டிருந்த கோவை தேங்கும் நிலையில் இருப்பதாகவும் 2002-ல் மாணவராக வந்த போது குளுமையாக கோவை இருந்த சூழலில் தற்போது வெப்பமாக மட்டும் இல்லாது காற்று ஒளி மாசு அதிகமாகி விட்டது.

அண்ணாமலை

அப்போது தொலைநோக்கு பார்வையில்லாத ஆட்சியாளர்களால் எங்கு செல்வது என்று தெரியாமல் நொய்யலைப் போன்று கோவையும் மாறி கோவை இருப்பதாகவும் விமர்சித்தார்.

கோவை சர்வதேச விமான நிலையம் 87 ஏக்கருக்காக காத்திருக்கிறது எனும் அதனை மாநில அரசும் செய்வதாக இல்லை புறவழிச் சாலை திட்டம் இல்லை என்றும் திட்டமிடுதல் இல்லாததால் மக்கள் தொலைநோக்கு மற்றும் தேசிய பார்வையுடன் இந்த தேர்தலை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அண்ணமலை

இளைஞர்கள் மற்றும் கல்லூரிகள் அதிகமாக உள்ள இடங்களில் போதை பொருட்கள் வலம் வரும் எனவும் கோவையில் எங்கு பார்த்தாலும் கல்லூரிகள் இருக்கும் நகரம் என்பதால் போதை கலாச்சாரம் அதிகம் உள்ள நகரமாக கோவை இருக்கின்றன.

அரசு இயந்திரம் தவறாக நடக்க ஆரம்பித்ததால் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை சந்தேகப்படும் இல்லை உருவாகியுள்ளது எனவும் கூறியவர் தான் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக பட்சத்தில் எண்ணி 45 நாட்களில் தேசிய போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தை கோவைக்கு கொண்டு வருவேன்.

அண்ணாமலை

இதனால் நிபுணத்துவம் பயிற்சி பெற்ற தேசிய போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தை கொண்டு வருவேன் எனவும் உறுதியளித்தார்.

கடுமையான சட்டங்கள் இருந்தும் முறையான நடைமுறை இல்லாததால் போதை கலாச்சாரம் தமிழகத்தில் இருப்பதாகவும் இதுகுறித்து அரசை விமர்சிப்பதன் காரணமாகவே தன் மீது 2 வழக்குகளை முதலமைச்சர் தொடர்ந்துள்ளார் எனவும் மேற்கோள் காட்டினார்.

அண்ணாமலை

அச்சம் இல்லாமல் கோவை மக்கள் பொது வரவேண்டும் எனவும் தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது என்றும் கோவை சிலிண்டர் குண்டுவெடிப்புக்கு முதல் எதிர்ப்பை தெரிவித்தது.

அப்போது இங்குள்ள ஜமாத் தான் என்றும் குறிப்பிட்டதுடன் தான் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய உடன் கோவையில் தேசிய பாதுகாப்பு முகமை எனும் எம்எல்ஏ அலுவலகம் கொண்டு வரப்படும் எனவும் கூறினார்.

அண்ணாமலை

தனக்கு போட்டியாக உள்ள ஒரு கட்சி பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்டால் தங்களது தலைவர் ஸ்டாலின் என்றும் ராகுல் காந்தி என்றும் கூறுவதாகவும் மற்றொரு கட்சியினர் எங்கள் எம்பி க்கு வாக்களித்தால் மத்திய அரசை வலியுறுத்துவோம் எனவும் கூறுகின்றனர்.

மத்திய அரசை நீங்கள் வலியுறுத்தினால் எதற்காக உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் இங்குள்ளவர்கள் வலியுறுத்த மாட்டார்களா எனவும் கேள்வி எழுப்பியதுடன் அதே வேளையில் நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால் மத்திய அரசிடம் உரிமையாக கேட்போம் கடமையாக மத்திய அரசு செய்ய வேண்டும்.

அண்ணாமலை

எங்களுடைய ஆட்சி என்றாலும் சண்டை போட்டாவது திட்டங்களை கோவைக்கு கொண்டு வருவோம் என்றும் உறுதிப்பட கூதினார். தொடர்ந்து பேசிய அவர் கோவையில் இருந்து அயோத்தி சென்றுவர ஆஸ்தா ரயில் போக்குவரத்தை நிரந்தர படுத்துவோம்.

கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக என்ன செய்வோம் என்பது தொடர்பான புத்தகம் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here