கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கி இந்த ஆண்டோடு சேர்த்து தொடர்ந்து 10 வது வருடமாக செங்கோட்டையில் கொடி ஏற்றுவதாக தெரிவித்த நரேந்திர மோடி , அடுத்த ஆண்டும் தான் தான் செங்கோட்டையில் கொடியேற்றிவேன் என்று நம்பிக்கையோடு தெரிவித்தார் .
இந்திய நாட்டின் 77-வது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
பின்னர் மூவர்ண கொடியை ஏற்றுவதற்காக செங்கோட்டை வந்த பிரதமர் மோடியை மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.
செங்கோட்டையில் முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்ற பிரதமர் மோடி பின்பு தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது நமது தேசியகீதம் இசைக்கப்பட்டு, 21 குண்டுகள் முழங்க இந்திய தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஏற்பட்ட மாறுதல் போல , கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு உலகம் ஒரு புதிய மாற்றத்தை கண்டுள்ளது என்று பேசியுள்ளார் .
இந்தியாவை இப்போது ‘விஸ்வாமித்ரா’ என்று அடையாளப்படுத்திய அவர், முடிதிருத்தும் மற்றும் பொற்கொல்லர்களுக்காக தொடங்கப்படவுள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு ரூ. 13,000-15,000 கோடி வரை நிதி ஒதுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார் .
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசிய மோடி கடந்த 2014 முதல் பாஜக தலைமையிலான அரசு பல்வேறு சீர்த்திருத்தங்களை செய்துள்ளது .அதன் பயனாக உலக பொருளாதாரத்தில் 10வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5வது இடத்திற்கு சென்று முன்னேறியுள்ளது.என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் .
மணிப்பூர் கலவரத்தை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, வடகிழக்கு மாநிலத்தில் அமைதியின் மூலம் தீர்வு காணப்படும் என்று கூறினார். ‘அதிர்வுமிக்க கிராமங்கள்’ திட்டத்தின் மூலம் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள எல்லையோர கிராமங்களை தனது அரசாங்கம் மாற்றியுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
“எல்லையில் இருப்பதால் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் கிராமம் இந்தியாவின் கடைசி கிராமம் அல்ல, நான் முன்பே , இது நாட்டின் முதல் கிராமம்” என்று அவர் கூறினார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் மற்றும் மக்கள்தொகை கணக்கிலும் , நாங்கள் நம்பர் ஒன் என்று நம்புகிறோம்.அப்படிப்பட்ட மாபெரும் தேசம் இன்று சுதந்திரப் பண்டிகையை அதன் 140 பில்லியன் சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடுகிறது.
இந்த முக்கியமான மற்றும் புனிதமான சந்தர்ப்பத்தில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், நமது தேசமான இந்தியாவை நேசிக்கும், மதிக்கும் மற்றும் பெருமை கொள்ளும் ஒவ்வொருவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது சுதந்திரப் போராட்டத்தின் போது உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் இன்று மரியாதையுடன் அஞ்சலி செலுத்துகிறேன். சுதந்திர தேசத்தை எமக்கு வழங்கிய அவர்களின் தவத்திற்கு நான் பணிவுடன் தலைவணங்குகிறேன்.
துரதிர்ஷ்டவசமாக, இம்முறை இயற்கை பேரிடர் நாட்டின் பல பகுதிகளில் கற்பனை செய்ய முடியாத துயரத்தை உருவாக்கியது. இந்த நெருக்கடியில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன், மேலும் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு உங்களுக்குத் துணை நிற்கும் என்றும், உங்களது பிரச்சனைகள் அனைத்தையும் விரைவில் தீர்க்கும் என்றும் உறுதியளிக்கிறேன் , என்று அவர் பேசினார் .
கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கி இந்த ஆண்டோடு சேர்த்து தொடர்ந்து 10 வது வருடமாக செங்கோட்டையில் கொடி ஏற்றுவதாக தெரிவித்த நரேந்திர மோடி , அடுத்த ஆண்டும் தான் தான் செங்கோட்டையில் கொடியேற்றிவேன் என்று நம்பிக்கையோடு தெரிவித்தார் .
மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஊழல் வாதிகளுக்கும் , வாரிசு அரசியல் செய்பவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டாம் என்று தனது உரையில் கேட்டு கொண்டார்