- காரல் மார்க்ஸ்
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே , பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோரை தொடர்ந்து தனக்கும் பிரதமர் பதவியின் மீது நாட்டமில்லை என்று மேற்கு வாங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளிப்படையாக அறிவித்துள்ளார் .
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனக்கு பிரதமர் பதவியின் மீது ஆசை இல்லை என்றும் , வருகிற மக்களவை தேர்தலில் பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஈகையார் தின பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தனக்கு பிரதமர் பதவி நாற்காலிக்கு ஆசை இல்லை என்றும், பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிராக போராட தயாராக இருப்பதாகவும் பகிரங்கமாக அறிவித்துள்ளார் .

இவரை போன்றே காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரும் பிரதமர் பதவியில் தங்களுக்கு விருப்பமில்லை என்று வெளிப்படையாக அறிவித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது .
நாட்டில் ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் காப்பாற்ற காங்கிரஸ் போராடி வருவதாகவும், அதே எண்ணம் கொண்ட கட்சிகள் அனைத்தையும் ஒரே மேடையில் கொண்டு வந்ததாகவும் முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்திருந்தார் .
முன்னதாக, செவ்வாய்க்கிழமை பெங்களுருவில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசுக்கு எதிராக திமுக , காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள், நடத்திய மெகா எதிர்க்கட்சி ஆலோசனை கூட்டத்தின்போது பெங்களூரு சாளுக்கிய சர்க்கிள், வின்ட்சர் மேனர் பாலம் மற்றும் ஹெப்பல் அருகே உள்ள விமான நிலைய சாலை ஆகிய இடங்களில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிராக சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் அமைக்கப்பட்டன .
இந்த கூட்டத்தின் போது 2024 லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதாவை ஓரம் கட்டவும், காவி கட்சிக்கு எதிராக வலுவான முன்னணியை உருவாக்கவும் எதிர்க்கட்சிகள் உத்திகள் குறித்து விவாதித்தன.

மேலும் அப்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜக மற்றும் அதன் என்டிஏ கூட்டணிக் கட்சிகள் இந்தியாவின் மதிப்புகள் மற்றும் ஜனநாயகத்தை அச்சுறுத்துவதாகக் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில்தான் செய்தியாளர் சந்திப்பில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சவால் விடுத்துள்ளார் ,அவர் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான I-N-D-I-A வை பாஜக கூட்டணியால் தோற்கடிக்க முடியுமா என்று சவால் விடுத்துளார் .
உங்களால் இந்தியாவுக்கு சவால் விட முடியுமா? எங்கள் பிரச்சாரம் I-N-D-I-A என்ற பதாகையின் கீழ் இருக்கும். உங்களால் முடிந்தால் எங்களைப் தோற்கடிக்க முயற்சி செய்யுங்கள் ” என்று அவர் கூறினார். மேலும் நாட்டையும் அதன் ஜனநாயகத்தையும் பாஜக “வியாபார பொருட்கள் போல விற்கிறது” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அவர்கள் (பாஜக) எந்த ஒரு மத்திய நிறுவனத்தையும் அதன் வேலையைச் சுதந்திரமாக செய்ய விடுவதில்லை. யாரேனும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டாலோ அல்லது ஆதரவாகவோ பேசினாலோ, அடுத்த நாளே அவர்களின் வீட்டு வாசலில் அமலாக்கத்துறை அல்லது CBI ரெய்டு நடக்கும் என்று விமர்சனம் செய்துள்ளார் ,மம்தா .