இனி கோவையில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..!

2 Min Read

கோவை மாவட்டத்தில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது – ஊர் முழுக்க சிசிடிவி கேமராக்கள் – கோவையில் இப்படியும் ஒரு பேரூராட்சி!

- Advertisement -
Ad imageAd image

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல கூட்ட நெரிசலை பொறுத்து கோவையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார். மோப்பரிபாளையம் பேரூராட்சியில் நடைபெற்ற சிசிடிவி கேமராக்கள் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மோப்பரிபாளையம் பேரூராட்சியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சசிகுமார் என்பவர் தலைவராக இருந்து வருகிறார்.

சிசிடிவி கேமராக்கள்

தமிழகத்தில் சுயேச்சை வசம் உள்ள இந்த பேரூராட்சியில் எண்ணற்ற முன்னோடி திட்டங்கள் அரசு நிதி மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குற்ற சம்பவங்களை தடுக்க பேரூராட்சி பகுதிகள் முழுவதும் சிசிடிவி கேமராக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
பேரூராட்சிக்குட்பட்ட முக்கிய இடங்கள் தெருக்கள் என 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கேபிள் மூலமாக பேரூராட்சியில் உள்ள கண்காணிப்பு அறையில் பெரிய திரைகளில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு

இந்த கேமராக்கள் குற்றங்களின் எண்ணிக்கை குறைக்கவும், தடுக்கவும் பேரு உதவியாக இருந்து வருகிறது. சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காணிப்பு கேமராக்கள் இன்று பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி, மற்றும் கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி பேரூராட்சித் தலைவர் சசிகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், பொதுமக்கள் தங்களது வீடுகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கு முன்வர வேண்டும்,

இதுபோல் கேமராக்கள் அமைக்கப்படுவதால் குற்றங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மோப்ரிபாளையம் பேரூராட்சியில் தனியார் பங்களிப்போடு 100 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சிசிடிவி கேமராக்கள் திறந்து வைப்பதால் கிராமப்புறங்களில் குற்றங்கள் பெருமளவு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குற்றங்கள் நடைபெறுவதை எளிதாக கண்டறிய சிசிடிவி கேமராக்கள் உதவியாக இருக்கிறது. கோவையில் ஒரு பேரூராட்சியில் முதன்முறையாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

கோவை பேரூராட்சி

இந்த பேரூராட்சியில் கட்டணமில்லா இலவச சேவை மையம், நூலகம் என முன்னோடி திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மேலும் செல்போன் செயலி மூலம் நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரம்புவது கண்காணிக்கப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை கோவையில் உள்ள அனைத்து பகுதிகளும் சவாலான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த திடக்கழிவு மேலாண்மைக்காக பல்வேறு திட்டங்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில், கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Share This Article
Leave a review